இலங்கை நாடாளுமன்றம் முடக்கம்: சந்திரிகா அதிரடி
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றத்தை இரு வார காலத்துக்கு முடக்கி வைத்து அதிபர் சந்திரிகா குமாரதுங்காஉத்தரவிட்டுள்ளார்.
இதனால் அங்கு அரசியல் சாசன நெருக்கடி எழுந்துள்ளதோடு, அமைதிப் பேச்சுவார்த்தைகளின் எதிர்காலமும்பெரும் கேள்விக் குறியாகியுள்ளது.
புலிகளிடம் ரணில் அரசு சரணடைந்து வருவதாகக் குற்றம் சாட்டி நேற்று பிற்பகலில் திடீரென ராணுவ, உள்துறை,செய்தித் துறை அமைச்சர்களின் பொறுப்புகளைப் பறித்து தன் வசம் வைத்துக் கொண்டார் சந்திரிகா.
இரவில் நாடாளுமன்றத்தின் செயல்பாட்டையும் இரு வார காலத்துக்கு முடக்கி வைப்பதாக அறிவித்தார்.
மேலும் நாடாளுமன்றக் கட்டடம், தொலைக்காட்சி மற்றும் ரேடியோ நிலையங்களிலும் பாதுகாப்புப் படைகளைக்குவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அமெரிக்காவில் உள்ள நிலையில் இந்த அதிரடி செயல்களில் சந்திரிகாஈடுபட்டுள்ளார்.
1999ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் சந்திரிகாவின் கட்சி வெற்றி பெற்று அவர் அதிபரானார். ஆனால்,அடுத்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி தோற்றது. இதனால் எதிர்க் கட்சியைச் சேர்ந்த ரணில்பிரதமர் பதவியைப் பிடித்தார்.
அன்று முதல் ரணிலுடன் சந்திரிகா மோதி வருகின்றார். குறிப்பாக புலிகளுடன் பேச்சு நடத்துவதையும், அவர்களதுகோரிக்கைகளை ஏற்பதையும் சந்திரிகா எதிர்க்கிறார்.
புலிகளுடன் பேச்சு நடத்தப்படும் என்று சொல்லித் தான் ரணில் ஆட்சியையே பிடித்தார். இந்தப்பேச்சுவார்த்தைகளால் நாட்டில் அமைதி திரும்பியுள்ளதால் மக்கள் மத்தியிலும் ரணிலுக்கு ஆதரவும் பெருகிவருகிறது.
இந் நிலையில் வரும் 12ம் தேதி பட்ஜெட்டை சமர்பிக்க ரணில் திட்டமிட்டிருந்தார். அதில் அரசு ஊழயர்கள்,காவல்துறை, ராணுவத்துறையினக்கு ஊதிய உயர்வுகளும் அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போர் காரணமாகநிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல சலுகைகளை மீண்டும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்க ரணில் திட்டமிட்டிருந்தார்.
இந்த சலுகைகள் நிறைந்த பட்ஜெட் தாக்கலானால் அரசியல்ரீதியில் தனது நிலை இன்னும் மோசமாகிவிடும் என்றுசந்திரிகா கருதுவதாகத் தெரிகிறது. இதனால், பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய விடாமல் தடுக்கவேநாடாளுமன்றத்தை அவர் முடக்கியுள்ளதாக ரணிலின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு சந்திரிகா திடீர் தேர்தலை அறிவிக்கவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications