இந்தியா ஆச்சரியம்
டெல்லி:
நாடாளுமன்றத்தின் செயல்பாட்டை முடக்கிய அதிபர் சந்திரிகாவின் செயல் குறித்து இந்தியா ஆச்சரியம்தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இதனால் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஆபத்து ஏற்படாது என்றுநம்புவதாகவும் கூறியுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நவ்ஜீத் சர்னா இது குறித்து கருத்து தெரிவிக்கையில்.
இலங்கையில் அரசியல் சாசன நெருக்கடி நேருமோ என இந்தியா கவலைப்படுகிறது. அந் நாட்டின் அரசியல்ஸ்திரத்தன்மை அதிபரின் இந்த நடவடிக்கையால் சீர்குலையாது என்று நம்புகிறோம் என்றார்.
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறுகையில், இலங்கையில் ஏற்பட்டுள்ளபுதிய திருப்பங்களால் இந்தியா- இலங்கை நல்லுறவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
இலங்கையில் நடந்து வரும் நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்து வருகிறோம். பிரச்சனையை அவர்களே (சந்திரிகா-ரணில்) பேசித் தீர்த்துக் கொள்வார்கள் என்று திடமாக நம்புகிறோம். இரு தரப்பினரும் இலங்கை அரசியல்சாசனத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள் என்று நம்புகிறோம் என்றார்.
கோபி அன்னான் கோரிக்கை:
அதிபர் சந்திரிகா எடுத்துள்ள நடவடிக்கைகளால் அரசுக்கும் புலிகளுக்கும் இடையே நடந்து வரும் அமைதிப்பேச்சுவார்த்தை பாதிக்கப்படாது என்று நம்புவதாக ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் கூறியுள்ளார்.
கருத்து தெரிவிக்க கூடாது: சு.சுவாமி
இலங்கையில் நடப்பது அந் நாட்டின் உள்நாட்டு விவகாரம். இதில் வாஜ்பாய் அரசு கருத்து ஏதும் தெரிவிக்கக்கூடாது என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு என்ன கருத்து சொன்னாலும் அது புலிகள் ஆதரவு திமுக, மதிமுக,பாமகவின் கருத்தாகவே எடுத்துக் கொள்ளப்படும். இந்தியாவின் நலனைக் கருத்தில் கொண்டு அதிபர்சந்திரிகாவுக்கு இந்தியா உதவ வேண்டும். முடிந்தால் செயற்கைக் கோள் படங்களைத் தந்து புலிகள் தலைவர்பிரபாகரனையும், பொட்டு அம்மனையும் பிடிக்க சந்திரிகாவுக்கு உதவி செய்ய வேண்டும்.
புலிகளோடு அமைதிப் பேச்சே தேவையில்லை என்று இந்தியா சொல்ல வேண்டும். இவ்வாறு சுவாமி தனதுஅறிக்கையில் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications