போர் நிறுத்தம் தொடரும்: கதிர்காமர்
கொழும்பு:
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் செயல்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தேவையானநடவடிக்கையை உரிய நேரத்தில் எடுப்போம் என்று புலிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே புலிகளுடன் ரணில் அரசு செய்து கொண்ட போர் நிறுத்தம் தொடரும் என சந்திரிகாவின் பாதுகாப்புஆலோசகர் லட்சுமண் கதிர்காமர் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
பாதுகாப்பு அமைச்சகத்தின் செயல்பாட்டை அதிபர் தன் வசம் எடுத்துக் கொண்டாலும், போர் நிறுத்த உடன்பாடுமுழுமையாக அமலில் இருக்கும் என்று அதிபர் திட்டவட்டமாக கூறியுள்ளார். மீண்டும் போரைத் தொடங்கும் எந்தமுயற்சியிலும் அரசு ஈடுபடாது. அப்படிப்பட்ட எண்ணமும் சந்திரிகாவுக்கு இல்லை.
கடந்த 18 மாதங்களாக நாட்டின் சட்டம்-ஒழுங்கு தொடர்ந்து சீர்குலைந்து வந்ததால் தான் இந்த நடவடிக்கையைஎடுக்க வேண்டிய நிலைக்கு சந்திரிகா தள்ளப்பட்டார் என்றார்.
நேற்று தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் சந்திரிகா, புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத்தொடர தயாராகவே இருப்பதாக கூறினார். அதே நேரத்தில் திரிகோணமலையில் விடுதலைப் புலிகள்ஆயுதங்களைக் குவித்து வருவதை ரணில் அரசு கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது. மேலும அமைதிஒப்பந்தத்தை புலிகள் மீறியபோதெல்லாம் அதையும் ரணில் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
ஆனால், அவரது செயல்களால் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு பங்கம் ஏற்படும் என்றே புலிகள் கருதுகின்றனர்.இந் நிலையில் அரசின் செயல்பாடுகள் குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாக புலிகள் கூறியுள்ளனர். மேலும்போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மறு பரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படுமா என்பது குறித்தும் ஆலோசித்துவருகின்றனர்.
இந் நிலையில் புலிகள் அனைவரும் தங்களது முகாம்களுக்குத் திரும்புமாறு அதன் தலைமை உத்தரவிட்டுள்ளது.இதனால் எதையும் எதிர்கொள்ள புலிகளும் தயாராவதாகத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications