பத்திரிக்கைகள் மீது மக்கள் நம்பிகையிழந்துவிட்டார்கள்: ஜெயலலிதா
சென்னை:
பத்திரிக்கைகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
தமிழக சட்டமன்றத்தில் கெளரவ ரேசன் கார்டுகளைக் கண்டித்து இன்று எதிர்க் கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்புத்தீர்மானம் கொண்டு வந்தன. அப்போது பேசிய திமுக எம்.எல்.ஏ. வேலு,
அரசின் உத்தரவுப்படி ரூ. 5,000 ஊதியம் உள்ளவர்கள் ரேசன் கார்டுகளில் எச் முத்திரை குத்தி அதை கெளரவரேசன் கார்டாக மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த முத்திரை குத்துவதால் கெளரவமாகிவிடுகிறார்கள். துப்புறவுத் தொழிலாளி, கொத்தனார் கூட எச் முத்திரை பெற வேண்டியுள்ளது என்றார்.
அப்போது இடைமறித்த முதல்வர் ஜெயலலிதா கூறுகையில், எந்தத் தொழிலையும் அரசு இழிவாகநினைக்கவில்லை. ரூ. 5,000 வருமானம் உள்ளவர்களுக்கு வெளி மார்க்கெட்டில் அரிசி வாங்கும் சக்தி உள்ளதுஎன்றார்.
வேலு: ஏழைகள் வீட்டில தான் அதிக குழந்தைகள் இருக்கிறார்கள். இன்றுள்ள விலைவாசியில் அவர்களால்வெளியில் அரிசி வாங்கி குடும்பம் நடத்த முடியாது.
நிதியமைச்சர் பொன்ணையன்: கொத்தனார் ரூ. 5,000 வாங்கினால், அந்தக் குடும்பத்தில் மற்றவர்கள் மூலமும்வருவாய் வர வாய்ப்புள்ளது. வெளிமார்க்கெட்டில் அரிசி வாங்கினால் அந்தக் குடும்பத்துக்கு கூடுதலாக ரூ. 250செலவாகும். அதை செலவு செய்ய முடியாதா?
ஜெயலலிதா: இதுவரை சுமார் 18 லட்சம் பேர் எச் முத்திரை குத்தி இருக்கிறார்கள். இப்போதும் கூட ரேசனில்விலையைக் குறைத்து விற்பதால் அரசுக்கு ரூ. 800 கோடி மானிய சுமை உள்ளது. மத்தியில் ஆட்சியில் உள்ள திமுகமந்திரிகள் முயற்சி எடுத்து மத்திய அரசு தரும் அரிசியின் விலையைக் குறைத்தால் அனைவருக்கும் ரூ. 3.50க்குஅரிசி வழங்க முடியும்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரன்: எச் முத்திரை பெறுவதற்கான வருமான வரம்பை ரூ. 7.500 ஆகவாவதுஉயர்த்த வேண்டும்.
ஜெயலலிதா: ஏதோ வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று எச் முத்திரை குத்தியது போல உறுப்பினர்கள்பேசுகின்றனர். ரேசனில் அரிசி, கோதுமை, சர்க்கரை போன்ற பெற விரும்பாதவர்கள அவர்களாகவே சென்று எச்முத்திரை குத்திக் கொண்டார்கள். இதில் நிர்பந்தமோ, கட்டாயமோ கிடையாது.
ஞானசேகரன்: வருமானம் குறித்துத் தவறான தகவல் தந்தால் 7 ஆண்டு சிறை என்று அரசு கூறியுள்ளதே.
அமைச்சர் பொன்னையன்: சில பத்திரிக்கைகள் தான் அவ்வாறு செய்தி தந்தன. அரசு அல்ல.
ஜெயலலிதா: கெளரவ ரேசன் கார்டுகள் விஷயத்தில் அரசின் திட்டம், விளக்கம் குறித்து டிவி போன்றஎலெக்ட்ரானிக் மீடியாக்கள் மூலம் மக்கள் தெளிவாகவே புரிந்து கொண்டார்கள். ஆனால், பத்திரிக்கைகள் தான்இதில் குழப்பம் செய்கின்றன. இதனால் தான் பத்திரிக்கைகளை மக்கள் புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இனிமேல் மாத வருமானம் ரூ. 5,000க்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரேசனில் அரிசி, கோதுமை, சர்க்கரைவழங்கப்படும்.
ஞானசேகரன்: எச் முத்திரை குத்த காலையில் சென்றால் மாலையாகிவிடுகிறது. அவ்வளவு நேரம் காக்கவேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள்.
உணவுத்துறை அமைச்சர் மோகன்: காலதாமதம் எல்லாம் எங்குமே ஏற்படவில்லை.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications