ஒயின் ஷாப்பில் வேலை: பட்டதாரிகளிடம் அதிமுகவினர் வசூல் ஆரம்பம்!
சென்னை:
தமிழகத்தில் ஒயின் ஷாப்களை அரசே நடத்தவுள்ள நிலையில், அந்தக் கடைகளில் கண்காணிப்பாளர்களாகபட்டதாரி இளைஞர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த வேலை வாங்கித் தருவதாகக் கூறி தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளிடம்அதிமுகவினர் வசூல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
தமிழக அரசுக்குச் சொந்தமான டாஸ்மார்க் நிறுவனம் நகர்ப் புறங்களிலும் கிராமப் பகுதிகளில் கூட்டுறவுநிறுவனங்களும் மதுக் கடைகளை நடத்த உளளன. இந்தக் கடைகளுக்கான விதிமுறைகளை தமிழக அரசு,டாஸ்மார்க முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது.
இதில் பட்டதாரி இளைஞர்களுக்கு கண்காணிப்பாளர் (சூபர்வைசர்) வேலை வழங்க தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது. அந்த விதிமுறைகளில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
இம் மாதம் 29ம் தேதி முதல் மாநிலத்தின் அனைத்து ஒயின் ஷாப்களும் அரசின் வசமாகிவிடும். 28ம் தேதி இரவு 11மணிக்கு அனைத்து தனியார் மதுக்கடைகளும் மூடப்படவேண்டும். அதுவரை விற்றது போக எஞ்சியுள்ளமதுபாட்டில்களை டாஸ்மார்க் அதிகாரிகள் பெற்றுக் கொள்வர்.
அன்றைய இரவே தனியார் மதுக்கடைகளின் பெயர்ப் பலகைகளை அகற்றிவிட்டு, தமிழ்நாடு அரசுமதுபானக்கடை என்ற புதிய பெயர் பலகையை வைக்க வேண்டும்.
தனியார் நிறுவனங்கள் இப்போது நடத்தி வரும் மதுக் கடைகளையே டாஸ்மார்க் நிறுவனம் வாடகைஅடிப்படையில் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். அந்த இடம் அல்லது கடைக்கு மூன்று மாத முன்பணம் மட்டுமே தர வேண்டும்.
நகர்ப்புறங்களில் அந்தந்த இடம் மற்றும் ஊர்களின் சந்தை மதிப்பிற்கேற்றவாறு சதுர அடி அடிப்படையில்வாடகையை நிர்ணயித்து அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். அரசு ஒப்புதல் அளித்த பின்பே வாடகை அளிக்கவேண்டும்.
ஒவ்வொரு மதுக்கடைக்கும் ஒரு சூபர்வைசர், 2 சேல்ஸ்மேன்களை அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்புஅலுவலகங்கள் மூலம் தேர்வு செய்து நியமிக்க வேண்டும். சூபர்வைசர் வேலைக்குப் பட்டதாரிகள் மட்டுமே தேர்வுசெய்யப்படவேண்டும். இதனால் 22 ஆயிரம் பேருக்கு அரசு வேலை கிடைக்கும்.
இந்த மதுக் கடைகள் காலை 8 மணியிலிருந்து இரவு 12 மணி வரை தினமும் செயல்படவேண்டும்.சேல்ஸ்மேன்களுக்கு இரு ஷிப்ட்களாக வேலை தர வேண்டும். அவர்களுக்கு வார விடுமுறை இல்லை.
சூபர்வைசர்களுக்கு ரூ.1,500ம் சேல்ஸ்மேன்களுக்கு ரூ.750ம் மாத ஊதியமாக வழங்கப்பட வேண்டும். காந்திஜெயந்தி, குருநானக் ஜெயந்தி போன்ற குறிப்பிட்ட இந்த மதுக் கடைகளை மூட வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து மதுக் கடையில் வேலை வாங்கித் தருவதாக்ச் சொல்லி, பட்டதாரிகளிடம் தலா ரூ.10,000 வரைகறக்கும் முயற்சியில் மாநிலம் முழுவதும் அதிமுக முக்கியப் புள்ளிகள் இறங்கியுள்ளனர்.
சட்டம் ஒழுங்கு பாதிக்காது: ஜெ
அரசே மது விற்பனை செய்ய முடிவெடுத்தது குறித்து இன்று தமிழக சட்டசபையின் கேள்வி நேரத்தின் போது திமுகஎம்.எல்,ஏ பொன்முடி கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்துக் கூறியதாவது:
தமிழ்நாடு அரசு மதுக்கடைகள் காலை 8 மணியிலிருந்து இரவு 12 மணி வரை திறந்திருப்பதால் சட்டம்-ஒழுங்குபாதிக்கப்படாது. ஏனெனில் காவல் துறையினர் 24 மணி நேரமும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications