மத்தியில் பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாத அரசை அமைக்க முயல்வேன்: ஜெயலலிதா
சென்னை:
அடுத்த மக்களவைத் தேர்தலுக்குப் பின் மத்தியில் பா.ஜ.க, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியின் ஆட்சியைஅமைக்க முயற்சி செய்வேன் என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
காவிரி விஷயத்தில் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டுமானால், மத்தியில் காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாதஅரசு ஆட்சிக்கு வர வேண்டும், அதற்கு இடதுசாரிக் கட்சிகள் உதவ வேண்டும் என்றார்.
சட்டமன்றத்தில் இன்று காவிரி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஎம்.எல்.ஏவான ஹேமச்சந்திரன். கர்நாடகத்தில் இருந்து நீரைப் பெற தமிழக அரசு முயற்சி எடுக்கவில்லை எனஅவர் குற்றம் சாட்டினார்.
இதற்குப் பதிலளித்து ஜெயலலிதா பேசியதாவது:
காங்கிரஸ், பா.ஜ.க, ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு கர்நாடகத்தில் ஆட்சியைக் கைப்பற்றவும் ஆட்சியைக்காப்பாற்றவும் அரசியல் நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஓட்டுக்களை மனதில் வைத்து அவைகர்நாடகத்துக்கு ஆதரவாக செயல்படுகின்றன.
தமிழகத்தில் அந்தக் கட்சிகளுக்கு ஆதரவு இல்லை. இதனால், காவிரி விவகாரத்தில் தமிழகத்தை அவைபுறக்கணிப்பதோடு, அநீதியும் செய்து வருகின்றன.
காவிரி ஆணையத்தைக் கூட்டக் கோரி பிரதமர் வாஜ்பாய்க்கு பலமுறை கடிதம் எழுதியும் பலன் இல்லை. உச்சநீதிமன்றம், நடுவர் மன்றம் ஆகியவற்றை நம்பித்தான் தமிழகம் உள்ளது. வேறு யாரையும் (வாஜ்பாய்) நம்பிநாங்கள் இருக்கவில்லை. இது தொடர்பாக நான் பிரதமரையே கண்டித்தேன். இதனால் உச்ச நீதிமன்றத்திலும் பதில்சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன்.
அதே நேரத்தில் யாருடைய பேச்சையும் கேட்க முடியாது, எந்த நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதிக்க முடியாது என்றுகர்நாடகம் பிடிவாதமாக உள்ளதால்தான் காவிரிப் பிரச்சினைக்கு தீர்வ காண முடியவில்லை.
ஓட்டு வங்கிக்காக அரசியல் நடத்தும் பா.ஜ.க., காங்கிரஸ், ஜனதாதளம் ஆகியவை மத்தியில் ஆட்சிக்கு வரக்கூடாது. அவை இல்லாத புதிய கூட்டணி ஆட்சிக்கு வந்தால்தான் தமிழகத்திற்கு நியாயம் கிடைக்கும், நீதிகிடைக்கும். இதனால் பா.ஜ.க. அல்லாத, காங்கிரஸ் அல்லாத ஒரு அரசு மத்தியில் உருவாக வரும் மக்களவைத்தேர்தலுக்குப் பின் நான் முயற்சி எடுப்பேன்.
அதிமுக மற்றும் பிற கட்சிகளின் இந்த முயற்சிகளுக்கு இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு தர வேண்டும் என்றார்.
ஆனால் அடுத்துப் பேசிய ஹேமச்சந்திரன், இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு வேண்டும் என்று முதல்வர்விரும்பினால், முதலில் மக்கள் விரோத கொள்கைகளை அதிமுக அரசு கைவிட வேண்டும் என்றார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications