பாதை தெரியாமல் தடுமாறுகிறது திமுக: ஜெயலலிதா கிண்டல்
சென்னை:
எந்தப் பாதையில் போவது என்று தெரியாமல் பெரும் ஊசலாட்டத்தில் இருக்கிறது திமுக என்று முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
சட்டசபையில் மதுவிலக்கு தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்குப் பதில் அளித்துப் பேசுகையில், திமுகவைத்தாக்கினார் ஜெயலலிதா.
அவர் கூறுகையில், மது விலக்குக் கொள்கையில் அரசு தடுமாறுவதாகவும், ஊசலாடுவதாகவும் எதிர்க்கட்சிகள்குற்றம் சாட்டியுள்ளன. ஆனால் யார் உண்மையில் தடுமாறுகிறார்கள் என்பதை மக்கள் அறிவார்கள்.
எந்தப் பாதையில் போவது என்று தெரியாமல் தமிழக அரசியலில் யார் தடுமாறுகிறார்கள், ஊசலாடுகிறார்கள்என்பது மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். அவர்களது பாதையில் போக முடிவு செய்தால், நிச்சயம் தோல்விதான்என்பதையும் மக்கள் அவர்களுக்கு தெரியப்படுத்துவார்கள்.
மதுக் கொள்கையில் அரசு தள்ளாடுவதாக ஒரு தலைவர் (கருணாநிதி) கூறுகிறார். ஆனால் உண்மையில் மதுவுக்குதமிழக இளைஞர்களை அடிமையாக்கி தள்ளாட விட்டவர் அவர்தான். அவரது பதவிக் காலத்தில்தான் (1972ம்ஆண்டு) முதன் முதலாக மது விலக்கு தளர்த்தப்பட்டு மது தாராளமாக கிடைக்க வகை செய்யப்பட்டது.
இளைஞர்களை மட்டும் அவர் தள்ளாட விடவில்லை. மாநிலத்தின் நிதி நிலையையும் ஆட்டம் காண வைத்துவிட்டார் அந்தத் தலைவர். நான் முதல்வராகப் பதவியேற்றபோது அரசின் நிதி நிலை கோமா நிலையில் இருந்தது.எனது தீவிரமான முயற்சிகளின் காரணமாக இப்போது அது சாதாரண நிலைக்கு வந்து கொண்டுள்ளது என்றார்ஜெயலலிதா.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications