கண்ணப்பன், மாஜி அதிமுக எம்.எல்.ஏ. மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல்
சென்னை:
முன்னாள் அதிமுக அமைச்சர் கண்ணப்பன், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. தேனி பன்னீர்செல்வம் ஆகியோர் மீதுலஞ்ச ஒழிப்புப் போலீசார் இன்று குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலாவுக்கு அடுத்தபடியாக மிக செல்வாக்குடன் விளங்கியவர்கண்ணப்பன். பொதுப்பணி மற்றும் மின் துறை அமைச்சராக இருந்து கோடிக்கணக்கில் சொத்து குவித்ததாக அவர்மீது புகார் உண்டு.
அதிமுக ஆட்சியின் கடைசி காலத்தில் போயஸ் தோட்டத்தில் அவரது செல்வாக்கு சரிந்தது.நெடுஞ்சாலைத்துறையிலும், கதர் வாரியம், கிராமத் தொழில்துறை ஆகியவற்றில் நடந்த ஊழல்கள் தொடர்பாககண்ணப்பன் மீது சேலத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சேலத்தில் நெடுஞ்சாலைத் துறைக்கு உபகரணங்கள் மற்றும் பொருள்கள் வாங்கியதிலும், கதர் வாரிய காண்ட்ராக்ட்விட்டதிலும் அரசுப் பணம் ரூ. 6.20 கோடி கையாடல் செய்யப்பட்டதாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக கண்ணப்பன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், காண்ட்ராக்டர்கள் உள்பட 50 பேர் மீது வழக்குபோடப்பட்டது.
ஆனால், போலீசார் அந்த விசாரணையை துரிதமாக நடத்தவில்லை.
ஆட்சி போனதும் கட்சியில் இருந்து விலக்கப்பட்ட கண்ணப்பன் மக்கள் தமிழ் தேசம் என்ற ஜாதிக் கட்சியைஆரம்பித்து நடத்தி வருகிறார்.
பின்னர் வந்த திமுக ஆட்சியில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட பல முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது லஞ்ச-ஊழல் வழக்குகள் போடப்பட்டன. ஆனால், கண்ணப்பன் மட்டும் தப்பினர்.
அதிமுக ஆட்சியில் அவர் மீது பதிவான வழக்கைக் கூட திமுக ஆட்சியில் துரிதமாக விசாரிக்கவில்லை. இதனால்,திமுக புள்ளிகளை கண்ணப்பன் கவனித்துவிட்டதாக புகார் எழுந்தது.
இந் நிலையில் கடந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணியும் அமைத்து சில இடங்களையும் வாங்கினார்கண்ணப்பன். ஆனால், அனைத்திலும் அவர் நிறுத்திய வேட்பாளர்கள் தோற்றனர்.
இந் நிலையில் அந்த வழக்கில் இப்போது கண்ணப்பன் மற்றும் அதிகாரிகள், காண்ட்ராக்டர்கள் மீது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர் லஞச ஒழிப்புப் போலீசார். சேலம் முதன்மை மாஜிஸ்திரேட்டிடம் இந்தகுற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட், கண்ணப்பன் உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் வரும் 10ம் தேதிநீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
அதே போல அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர் செல்வம் மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை இவர் போடிநாயக்கனூர் எம்.எல்.ஏவாக இருந்த காலத்தில் தனதுவருமானத்தையும் மீறி ரூ. 21 லட்சம் அளவுக்கு சொத்து குவித்ததாக இவர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதில் இன்று குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications