புஷ்சுடன் ரணில் சந்திப்பு
வாஷிங்டன்:
அமெரிக்காவில் உள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அந் நாட்டு அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சந்தித்துப்பேசினார்.
அப்போது இலங்கை நாடாளுமன்ற அரசியல் குறித்தும், தனக்கும் அதிபருக்கும் உள்ள அரசியல் கருத்துவேறுபாடுகள குறித்தும் புஷ்ஷிடம் ரணில் விளக்கினார்.
இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண அமைதிப் பேச்சுவார்த்தைகள் முக்கியம் என்பதை வலியுறுத்திய அமெரிக்கா,ரணிலுக்கும் சந்திரிகாவுக்கும் இடையிலான விவகாரம் அந் நாட்டின் உள்நாட்டு அரசியல் பிரச்சனை என்றுகருதுகிறது.
அரசியல் மோதலில் ரணிலுக்கோ, சந்திரிகாவுக்கோ தனிப்பட்ட முறையில் புஷ் ஆதரவு தெரிவிக்காவிட்டாலும்,புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் விஷயத்தில் ரணிலின் தலைமையை முழுமையாக ஆதரித்தாகஅமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஸ்காட் மெக்கல்லன் தெரிவித்தார்.
இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ரணில், இலங்கை அரசியலில் என்ன நடக்கிறது என்று புஷ் கேட்டார்.அதற்கு விளக்கம் தந்தேன். எனக்கு மெஜாரிட்டி இருப்பதை விளக்கினேன்.
இலங்கை நாடாளுமன்றத்தின் 25 கால வரலாற்றில் பல ஏற்றங்களும், தாழ்வுகளும் மாறி, மாறி ஏற்பட்டுவந்துள்ளன. நான் இலங்கையில் இருந்து அமெரிக்கா கிளம்பும்போது எல்லாம் சரியாகத் தான் இருந்தது.இப்போது ஏதேதோ நடந்துவிட்டது.
நாடாளுமன்றத்தில் எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது. மக்களின் பெருவாரியான ஆதரவும் உள்ளது. மக்கள்ஆதரவுடன் நாட்டில் அமைதியை ஏற்படுத்த புலிகளுடன் பேசி வருகிறோம். அதே நேரத்தில்நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் வந்தால் அதை எதிர்கொள்ளத் தயார். தேர்தலை நான் வரவேற்கிறேன்.
புலிகளுடன் நான் நேரடியாக தொடர்பில் இல்லை. நார்வே தூதர்கள் மூலம் தான் அவர்களுடன் பேசி வருகிறோம்என்றார்.












Click it and Unblock the Notifications