தலித் பஞ்சாயத்துகள் விவகாரம்: பேச சபாநாயகர் அனுமதி மறுப்பு- திருமாவளவன் வெளிநடப்பு
சென்னை:
கீரிப்பட்டி, பாப்பாபட்டி உள்ளிட்ட தலித் பஞ்சாயத்துகளில் தேர்தல் நடத்துவதில் உள்ள ஜாதிரீதியானபிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டதால் விடுதலைதச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்திருமாவளவனும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயக்குமாரும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இன்று காலை சட்டமன்றத்தில் இந்தப் பிரச்சனையைக் கிளப்பினர். அப்போது இடைமறித்த சபாநாயகர் காளிமுத்து,இன்று அவையில் 10 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படவுள்ளதால், இந்தப் பிரச்சனை பற்றிப் பேச காலஅவகாசமில்லை என்றார்.
இன்று தான் சட்டமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாள் என்பதால் இன்றே மசோதாக்களை நிறைவேற்றியாகவேண்டும் என்றார்.
இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த திருமாவளன் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். அதே போலஜெயக்குமாரும் வெளியேறினார்.
வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம்,கொட்டகச்சியேந்தல் ஆகிய தலித் பஞ்சாயத்துக்களில் நீண்ட காலமாக தேர்தல் நடத்தப்பட முடியாமல் உள்ளது.இது குறித்துப் பேச முயன்றால் சபாநாயகர் அனுமதி மறுக்கிறார்.
தலித்கள் தங்களது குறைகளை சட்டசபையில் சொல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்குஎதிரான உயர் ஜாதி சக்திகளை அதிமுக அரசு வளர்த்து விடுகிறது, அவர்களை தலித் மக்களுக்கு எதிராக அரசேதூண்டி விடுகிறது என்றார்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications