ஜெ.வின் ஆசை நிறைவேற உதவ மாட்டோம்: மார்க்சிஸ்ட்
கோயம்புத்தூர்:
அதிமுகவுடன் எந்த ஒரு தேர்தல் கூட்டணியும் வைக்கப்பட மாட்டாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதிட்டவட்டமாக அறிவித்துள்ளது.
மத்தியில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது கூட்டணி அமைக்கும் தனது முயற்சிக்கு இடதுசாரிக் கட்சிகளின்ஆதரவு தேவை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இந் நிலையில் கோவையில் நிருபர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன்,
ஜெயலலிதா தலைமையிலான அரசு பொது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்துவருகிறது.உரிமைகளுக்காகப் போராடிய மாநில அரசு ஊழியர்களைக் குற்றவாளிகளாக்கி அலைக்கழித்து வருகிறது.
இப்போது மத்திய அரசு ஊழியர்களையும் அந்த நிலைக்கு ஆளாக்க முயல்கிறது போலும். அதற்குத் தான் எங்களதுஆதரவை அவர் கேட்கிறாரா?.
நவம்பர் 13ம் தேதி கொல்கத்தாவில் தொடங்கும் கட்சியின் தலைமைக் குழு கூட்டத்தில் இது பற்றி விவாதிப்போம்எனறாலும், தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை இப்போதே நான் உறுதிபடுத்துகிறேன்.
காவிரி நதி நீரைப் பெறுவதற்காகத்தான் இத்தகைய கூட்டணியை தான் அமைக்க விரும்புவதாக ஜெயலலிதாகூறியிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. காவிரி நீரைப் பெறுவது தொடர்பாக எந்த ஒரு முன் முயற்சியும் அவர்எடுக்கவில்லை.
எதிர்க் கட்சிகளுடன் இது பற்றி அவர் கலந்து ஆலோசிக்கவில்லை. மேலும் கர்நாடக முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையைத் தீர்பபதிலும் அவர் ஆர்வம் காட்டவில்லை.
மத்தியில் மூன்றாவது அணி அமைக்க அவர் முயல்வது தனது பிரதமர் பதவி ஆசையைத் தீர்த்துக் கொள்வதற்குமட்டும்தான். எனவே எந்தக் காரணம் கொண்டும் ஜெயலலிதாவின் இந்தக் கோரிக்கையை மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி ஏற்காது.
என்கெளன்டர் என்ற பெயரில் தமிழகத்தில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து விரிவான விசாரணைநடத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
நான் பிரதமராவேன்: லல்லு
இந் நிலையில் ஜோத்பூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ராஷ்டிரீய ஜனதா தளத் தலைவர் லல்லு பிரசாத்யாதவ் நானும் ஒரு நாள் பிரதமர் ஆவேன் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.
தான் பிரதமர் ஆவதற்காக லல்லுவுடனும் கூட்டணி சேர ஜெயலலிதா முயற்சித்து வரும் நிலையில், லல்லு தனதுபிரதமர் ஆகும் ஆசையை வெளிப்படுத்திவிட்டார்.
ஜெ.வின் பேச்சு வெறும் கனவு: திருநாவுக்கரசு
இது குறித்து ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் பேசிய மத்திய தொலைத் தொடர்புத் துறை இணை அமைச்சர்திருநாவுக்கரசு,
மூன்றாவது அணி அமைப்பது என்பது வெறும் கனவாகும். காவிரி நதி நீர்ப் பிரச்சனை குறித்தோ, மூன்றாவதுஅணி அமைப்பது குறித்தோ ஜெயலலிதா பேசி வருவது, அவர் அரசியல் நடத்துவதற்கு வேண்டுமானால்உதவலாம். அதனால் தமிழகத்திற்கோ, நாட்டிற்கோ எந்தப் பயனும் இல்லை என்று கூறினார்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications