15 வயது சிறுவன் குண்டர் சட்டத்தில் கைது!
மதுரை:
மதுரையில், 15 வயது சிறுவனை குண்டர் சட்டத்தில் போலீஸார் கைது செய்துள்ளதாக மனித உரிமை அமைப்புபுகார் கூறியுள்ளது.
இதுதொடர்பாக மனித உரிமை வழக்கறிஞர்கள் என்ற அமைப்பின் சார்பில் அதன் இணைச் செயலாளர் லாஜ்பதிராய் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்யராஜ் என்ற 15 வயது சிறுவன் மதுரை யு.சி. மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு வரை படித்தவன். பள்ளியிலிருந்து வெளியேறியபோது அவனுக்கு கொடுக்கப்பட்டடி.சி.யில் நல்லொழுக்கம் மிக்கவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந் நிலையில், கடந்த 2002ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி கிரிக்கெட் விளையாடும் போது கிரிக்கெட்ஸ்டெம்பினால் இன்னொரு பையனை சத்யராஜ் அடித்து விட்டான். இதில் அந்தப் பையன் படுகாயம் அடைந்தான்.
இதைத் தொடர்ந்து சத்யராஜை போலீஸார் கைது செய்தனர். ஆனால் அவர் மீது இளம் குற்றவாளிகள் சீர்திருத்தச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக சத்யராஜ் மீது மேலும் இரண்டு திருட்டு வழக்குகள்இருப்பதால், அவனை குண்டர் சட்டத்தில் போலீஸார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் கடுமையானகுற்றவாளிகள் மத்தியில் அடைத்துள்ளனர்.
சத்யராஜுக்கு மன நல ஆலோசனையும் கொடுக்கப்படவில்லை. சட்டத்திற்கு முரணாக அவனை குண்டர் சட்டத்தில்கைது செய்துள்ளது கடுமையான மனித உரிமை மீறலாகும்.
சத்யராஜின் வழக்கு மதுரை 5-வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, அவனை இளம் குற்றவாளிஎன்றுதான் நீதிபதி அறிவித்தார். ஆனால் சத்யராஜுக்கு20 வயது ஆவதாக போலியான சான்றிதழைக் கொடுத்துபோலீஸார் குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளியுள்ளனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications