பெங்களூரில் அத்துமீறிய தமிழக போலீஸ்: கார்கே கண்டனம்
பெங்களூர்:
பெங்களூரில் நடந்த இந்து பத்திரிக்கையின் 125-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து காண்ட இந்து நாளிதழ் இணை நிர்வாக இயக்குநர் எச்.முரளியின் காரை நிறுத்தி தமிழக போலீஸார் அத்துமீறி நடந்து கொண்டனர். இதற்கு கர்நாடகப் போலீஸ் அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்து நாளிதழின் 125-வது ஆண்டு விழா பெங்களூரில் நடந்தது. இதில் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் ஆசிரியர் ரவியைக் கைது செய்வதற்காக தமிழகப் போலீஸ் படை பெங்களூர் வந்திருந்தது.
இந்த நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக என்.ராம், ரவி உள்ளிட்டோர் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஒரு அம்பாசடர் கார் இவர்களது காரை வழிமறித்து நின்றது. அதிலிருந்து இறங்கிய 6 பேர் காரில் உள்ளவர்களை கீழே இறங்கக் கூறினர்.
அவர்கள் அனைவரும் தமிழக போலீஸார் என்பதைப் புரிந்து கொண்ட ரவி, இது தமிழ்நாடு அல்ல, கர்நாடகம் என்று கோபத்துடன் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து இவர் ரவி அல்ல என்று கூறிய அவர்கள் திரும்பிச் சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸில் ரவி புகார் கொடுத்தார். இச்சம்பவத்திற்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் இந்த நடவடிக்கையை சகித்துக் கொள்ள முடியாது. தமிழக போலீஸார் அத்துமீறி நடந்து கொண்டுள்ளனர். அந்த நபர்களையும், வாகனத்தையும் தேடி வருகிறோம். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்வது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வருவதாக ஜெயலலிதா மனம் போன போக்கில் பேசுவது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை என்றார் அவர்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications