ஜெ.வின் புது அணி யோசனை: இந்திய கம்யூ நிராகரிப்பு
நாகப்பட்டினம்:
ஜெயலலிதா அமைக்க விரும்பும் பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது கூட்டணிக்கு எங்களது ஆதரவு ஒருபோதும் கிடையாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மாநிலத்தில் சர்வாதிகார ஆட்சியும், எதிர்க்கட்சி உறுப்பினர்களை சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியும் மரியாதைக்குறைவாகவும் நடத்தும் அதிமுக அரசை நாங்கள் எப்படி ஆதரிக்க முடியும்?
உரிமைகளை வேண்டி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை இந்த அரசு டிஸ்மிஸ் செய்துள்ளது. அவர்களுக்கு ஆதரவாக நான் பேசியபோது, வேலை நிறுத்தத்தைத் தூண்டியதாக என் மீது டெஸ்மா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று பயமுறுத்தியவர்தானே இந்த ஜெயலலிதா?
மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதாகக் கூறி பொதுமக்களுக்குக் கஷ்டம் ஏற்படும் வகையில் பல புதிய வரிகளை இந்த அரசு விதித்தது. ஆனால் முதலமைச்சரின் சுற்றுப்பயணங்களுக்காக அதிக அளவில் பணத்தைச் செலவழிக்கிறது.
எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி பல கோடி ரூபாய் செலவில் சட்டமன்றம் கட்ட முடிவு செய்துள்ளது. இத்தகைய அதிமுகவுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது என்றார் அவர்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications