உச்ச நீதிமன்றத்தை அணுகுகிறது இந்து!
சென்னை:
தமிழக சட்டசபை சபாநாயகர் காளிமுத்து பிறப்பித்துள்ள கைது உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகஇந்து பத்திரிக்கை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்து பத்திரிக்கையின் தலைமை ஆசியர் என்.ராம், நிர்வாக ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி, பதிப்பாளர்ரங்கராஜன், தலைமை நிருபர் ஜெயந்த், சிறப்பு நிருபர் ராதா வெங்கடேசன் மற்றும் முரசொலி ஆசிரியர் செல்வம்ஆகியோரை கைது செய்து 15 நாள் சிறையில் அடைக்க சபாநாயகர் காளிமுத்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இந் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து வழக்குத் தொடர இந்து நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. இன்று நிருபர்களிடம் பேசிய இந்து ஆசிரியர் ராம், எங்கள் அலுவலகத்தில் போலீசார் நேற்றுமிகவும் அத்துமீறி நடந்து கொண்டனர். அவர்கள் கொடுத்த பெரும் தொல்லையால் பத்திரிக்கைப் பணிபாதிக்கப்பட்டது. இதனால் இன்று காலை இந்துவை குறிப்பிட்ட நேரத்தில் அச்சடித்து அனுப்பக் கூட முடியாமல்போய்விட்டது.
போலீசார் தான் இதற்கு முழு பொறுப்பு. அரசின் தூண்டுதலால் அத்துமீறி நடந்த போலீஸ் மற்றும் சபாநாயகரின்தீர்ப்பை எதிர்த்து மிக விரைவில் நீதிமன்றத்தை இந்து நாடும் என்றார்.
இந் நிலையில் முன்னாள் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஹரிஷ் சால்வேயுடன் இந்து பத்திரிக்கைஅதிகாரிகள் இன்று டெல்லியில் ஆலோசனை நடத்தினர்.
பத்திரிக்கையாளர்கள் போராட்டம்:
இதற்கிடையே இந்து, முரசொலி பத்திக்கையார்கள் மீதான நடவடிக்கையைக் கண்டித்து பாண்டிச்சேரி, கோவைமற்றும் சேலத்தில் பத்திரிக்கையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில், செஞ்சிலுவைச் சங்க அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது.வாயில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டும், கைகளை சங்கிலிகளால் பிணைத்துக் கொண்டும்பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இதேபோல, சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் வாயில் கருப்புத் துணியுடன், செய்தியாளர்கள்,புகைப் படக்காரர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications