மாணவர் தாக்குதல்: போலீஸாருக்கு விசாரணை கமிஷன் கண்டனம்
சென்னை:
இந்தியாவிலேயே இதுவரை நடந்திராத அளவுக்கு, புகழ் பெற்ற தேசிய நாளிதழான இந்து பத்திரிக்கையின் ஆசிரியர் என்.ராம் உள்ளிட்ட 5 பேர் மற்றும் முரசொலி பத்திரிக்கை ஆசிரியர் செல்வம் ஆகியோரை 15 நாள் சிறையில் அடைக்க சபாநாயகர் காளிமுத்து அதிரடியாக தீர்ப்பளித்தார்.
மதுரை, மேலூர் அரசினர் கல்லூரி மாணவர்கள் மீது கடுமையான முறையில் தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இதுதொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி சுப்ரமணியம் கமிஷன் அறிக்கை கொடுத்துள்ளது
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி, மதுரை, மேலூர் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்லூரிக்குள் புகுந்த போலீஸார், மாணவர்களை கடுமையாக தாக்கினர். இதில் பல மாணவர்கள் படுகாயமடைந்தனர். சிலருக்கு கை, கால்கள் உடைந்தன.
இந்த கொடூர சம்பவம் தமிழக மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது. இதையடுத்து ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சுப்ரமணியம் தலைமையில் கமிஷன் ஒன்றை மாநில அரசு அறிவித்தது.
சுப்ரமணியம் கமிஷன் தற்போது தனது பரிந்துரையை அறிவித்துள்ளது. இந்த அறிக்கை சட்டசபையில் நேற்று வைக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளவை:
கல்லூரிக்குள் மாணவர்கள் மேற்கொண்ட போராட்டத்தை அடக்குவதற்காக வெளியிலிருந்து போலீஸார் கல்லூரிக்குள் நுழைந்தது ஏற்கக் கூடியதாகவே உள்ளது. அதேபோல, குறைந்த அளவிலான போலீஸாரே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆனால், கல்லூரிக்குள் நுழைந்த போலீஸார், மாணவர்களை விரட்டி விரட்டி கடுமையாக தாக்கியுள்ளனர். ஆசியர்கள் முன்பாக மாணவர்களை கடுமையாக அடித்துள்ளனர்.
இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி மற்றும் போலீஸாரின் நடவடிக்கை மிகவும் கடுமையானதாகும். அத்துமீறி அவர்கள் நடந்துள்ளனர். இதை ஏற்கவே முடியாது. எனவே அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலீஸார் நடத்திய தாக்குதலில் கல்லூரி முதல்வர் அறைக்குள் வைத்து பார்வையற்ற மாணவரான செந்தில்குமார் என்பவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாநில அரசு ரூ. 25,000 நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications