பெங்களூர் வந்த என். ராமின் காரை வழிமறித்து தமிழக போலீஸ் சோதனை
பெங்களூர்:
பெங்களூரில் நடந்த இந்து பத்திரிக்கையின் 125-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த இந்துநாளிதழ் இணை நிர்வாக இயக்குநர் எச்.முரளியின் காரை நிறுத்தி தமிழக போலீஸார் அத்துமீறி நடந்துகொண்டனர். இதற்கு கர்நாடக போலீஸ் அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்து நாளிதழின் 125-வது ஆண்டு விழா பெங்களூரில் நேற்று நடந்தது. இதில் கர்நாடக முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ஆசிரியர்ரவியைக் கைது செய்வதற்காக தமிழக போலீஸ் படை பெங்களூர் வந்திருந்தது.
இந்த நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்து பத்திரிக்கையின் தலைமை ஆசிரியர் என்.ராம், முரளிமற்றும் அவரது மனைவி தாரா உள்ளிட்டோர் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஒருஅம்பாசடர் கார் இவர்களது காரை வழிமறித்து நின்றது. அதிலிருந்து இறங்கிய 6 பேர் காரில் உள்ளவர்களை கீழேஇறங்கக் கூறினர்.
அவர்கள் அனைவரும் தமிழக போலீஸார் என்பதைப் புரிந்து கொண்ட முரளி, இது தமிழ்நாடு அல்ல, கர்நாடகம்என்று கோபத்துடன் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து இவர் ரவி அல்ல என்று கூறிய அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸில் முரளி புகார் கொடுத்தார். இச் சம்பவத்திற்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் இந்த நடவடிக்கையை சகித்துக் கொள்ள முடியாது. தமிழக போலீஸார்அத்துமீறி நடந்து கொண்டுள்ளனர். அந்த நபர்களையும், வாகனத்தையும் தேடி வருகிறோம்.
கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்வது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வருவதாக ஜெயலலிதா மனம்போன போக்கில் பேசுவது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை என்றார் அவர்.
விஜயக்குமார் பதவி விலக வேண்டும்: என்.ராம்
இந் நிலையில் சென்னை பிரஸ் கிளப்பில் நடந்த பத்திரிக்கையாளர்கள் உண்ணாவிரதத்தை வாழ்த்திப் பேச வந்தஇந்து என்.ராம், முரளி மற்றும் அவரது மனைவி தாராவிடம் அத்துமீறி நடந்து கொண்ட சென்னை போலீஸாரின்நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்று சென்னை மாநகர ஆணையர் விஜயக்குமார் பதவி விலக வேண்டும் என்றுகூறினார்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications