பத்திரிக்கையாளர் உண்ணாவிரதம்: போலீஸ் அடாவடி
சென்னை:
இந்து மற்றும் முரசொலி பத்திரிக்கையாளர்கள் மீது சட்டசபை எடுத்துள்ள நடவடிக்கையைக் கண்டித்து பல்வேறுசங்கங்களைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இன்று உண்ணாவிரதம்மேற்கொண்டு வருகின்றனர்.
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அல்லது வள்ளுவர் கோட்டம் எதிரே உண்ணாவிரதம் மேற்கொள்ளபத்திரிக்கையாளர்கள் அனுமதி கோரியிருந்தனர். ஆனால் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி கொடுக்கமுடியாது என்று காவல்துறை மறுத்து விட்டது.
இதையடுத்து சென்னை பிரஸ் கிளப் வளாகத்திலேயே உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து, காலை 9 மணிக்குஉண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. இதில் முன்னணி பத்திரிக்கையாளர்கள் உள்பட ஏராளமானோர்கலந்து கொண்டனர்.
இந்து மற்றும் முரசொலி பத்திரிக்கையாளர்கள் கைதானால், சக பத்திரிகையாளர்களும் கைதாகி சிறைக்குச் செல்லவேண்டும் என்றும், இந்து பத்திரிகை சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் போது, பிறபத்திரிகையாளர்களும் தங்களை இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ளும்படி மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்றும்பத்திரிக்கையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.
உண்ணாவிரதம் இருந்த பத்திக்கையாளர்களை திமுக சார்பில் ஆற்காடு வீராசாமி, ஆலடி அருணா, காங்கிரஸ்சார்பில் இளங்கோவன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வாழ்த்திப் பேசினர்.
நிகழ்ச்சியில் வாசன் பேசுகையில், ஜெயலலிதா அரசின் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு விரோதமானது. அதிகாரதுஷ்பிரயோகம் நடந்துள்ளது என்றார்.
இளங்கோவன் பேசுகையில், சுதந்திரத்திற்கு முன்பு நிலவிய சூழல் இப்போது ஜெயலலிதா ஆட்சியில் தமிழகத்தில்நிலவுகிறது என்றார்.
கோவையிலும் பிரஸ் கிளப் வளாகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. மதுரையில் மேலமாசி வீதி,வடக்கு மாசி வீதி சந்திப்பில் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications