மலேசியாவில் 8 தமிழர்களுக்கு மரண தண்டனை: காப்பாற்றுமாறு வைகோ கோரிக்கை
சென்னை:
பொய் வழக்கு போட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 8 தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்றுமாறு மத்தியஅரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு வைகோ எழுதியுள்ள கடிதத்தில்,ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சத்தியேந்திரன், செல்வன், வரதராஜன், குணசேகரன், அபிமன்னன்,திருச்செல்வம், இளங்கோவன், சரவணன் ஆகிய 8 இளைஞர்களும் மலேசியாவில் கட்டுமானத் தொழில்செய்வதற்காக சென்றிருந்தனர்.
இவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு அருகே குடியிருந்து வரும் 2 மலேசிய இந்தியர்கள், போதைப் பொருள் பதுக்கிவைத்திருந்ததாக பிடிபட்டுள்ளனர். ஆனால் தங்களது செல்வாக்கை வைத்து, தமிழக இளைஞர்கள்தான் போதைப்பொருள் வைத்திருந்ததாக கூறி பொய் வழக்கு போட வைத்து அவர்கள் தப்பி விட்டனர்.
பொய் வழக்குப் போடப்பட்ட தமிழக இளைஞர்களுக்கு தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்தஏப்ரல் மாதத்திலிருந்து இவர்கள் சிறையில் வாடி வருகிறார்கள். தங்களது நிலை குறித்து இந்தியத் தூதரகத்திற்குகோரிக்கை விடுத்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
சில வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதகரகங்கள் இதுபோன்ற சமயங்களில் எந்தவித உதவியையும் செய்யாதுஅமைதியாக உள்ளன.
எட்டு தமிழக இளைஞர்களும் அப்பாவிகள், ஒரு தவறும் செய்யாதவர்கள், அவர்களது குடும்பங்கள் கண்ணீரில்மூழ்கியுள்ளன. தனிப்பட்ட முறையில் இந்த விஷயத்தில் தலையிட்டு எட்டு அப்பாவி இளைஞர்களின்வாழ்க்கையைக் காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் வைகோ.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications