கோதாவரி ஆற்றில் படகு மூழ்கி, 20 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ராஜமுந்திரி:
இன்று காலை ஆந்திர மாநிலத்தில் கோதாவரி ஆற்றில் படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 20 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இலங்கைப் பகுதியில் வேலைக்குச் செல்லும் 45 தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு நாட்டுப் படகு ஒன்றுகோதாவரி ஆற்றில் சென்று கொண்டிருந்தது. படகு ராமச்சந்திரபுரம் என்ற இடத்தை நெருங்கியபோது, திடீரெனபடகு ஆற்றில் மூழ்கியது.
இந்த விபத்தில் படகில் பயணம் செய்தவர்களில் குறைந்தது 20 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 20 பேர் நீந்தி, பத்திரமாகக் கரை சேர்ந்துள்ளனர் கிழக்கு கோதாவரி மாவட்ட நிர்வாகம் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. 7 பெண்கள் உட்பட 9 பேரின் சடலங்கள் கிடைத்துள்ள நிலையில் மற்றவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications