காளிமுத்துவின் நடவடிக்கையைக் கண்டித்து கருப்பு கொடி ஏற்றி காங்கிரஸ் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்து, முரசொலி பத்திரிக்கையாளர்கள் மீது சட்டசபை சபாநாயகர் காளிமுத்து எடுத்த நடவடிக்கையைக் கண்டித்துதமிழகம் முழுவதிலும் காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி ஏற்றிப் போராட்டம் நடத்தினர்.
பத்திரிக்கையாளர்கள் மீது சபாநாயகர் காளிமுத்து எடுத்த நடவடிக்கையைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில்மாநிலம் முழுவதிலும் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர்சோ.பாலகிருஷ்ணன் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று மாநிலம் முழுவதிலும் காங்கிரஸார் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில்பல்வேறு இடங்களில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டு சபாநாயகரைக் கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது.
அதேபோல, முன்னாள் எம்.எல்.ஏ. தெய்வநாயகம் முன்னிலையில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டு போராட்டம்நடந்தது.












Click it and Unblock the Notifications