இந்து மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
புதுடெல்லி:
இந்து பத்திரிக்கை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது இன்று காலை விசாரணைநடக்கிறது. அதே சமயத்தில் முரசொலி செல்வம் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழக சட்டசபை பிறப்பித்துள்ள கைது உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி சபாநாயகரால் கைது வாரண்ட்பிறப்பிக்கப்பட்டுள்ள என்.ரவி, மாலினி பார்த்தசாரதி, ரங்கராஜன், ஜெயந்த், ராதா வெங்கடேசன் ஆகியோர்உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
மூத்த வக்கீல் ஹரிஷ் சால்வே இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
நீதிபதிகள் சபர்வால், ஏ.பி.சின்ஹா ஆகியோர் அடங்கிய அரசியல் சட்ட பெஞ்ச் காலை 10.30 மணிக்குஇம்மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது. அந்த சமயத்தில் முரசொலி செல்வம் சார்பிலும் மனுதாக்கல் செய்யப்படுகிறது.
இதற்கிடையே,டெல்லி சென்றுள்ள மத்திய இணை அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுகவினரும்,ஜி.கே.மணி தலைமையிலான பாமகவினரும் பிரதமர் மற்றும் துணைப் பிரதமரிடம் இன்று மாலை புகார் மனுகொடுக்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications