ஜெ. அரசுக்கு மரண அடி: இளங்கோவன்
சென்னை:
இந்து, முரசொலி பத்திரிக்கையாளர்களைக் கைது செய்ய உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடை, ஜெயலலிதாஅரசுக்குக் கிடைத்துள்ள மரண அடியாகும் என்று தமிழகக் காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன்கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இது ஜெயலலிதா அரசுக்குக்கிடைத்துள்ள மரண அடியாகும். பத்திரிக்கை சுதந்திரம் காப்பாற்றப்பட்டுள்ளது என்றார்.
திமுக தலைவர் கருணாநிதி கூறுகையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பத்திரிக்கைச் சுதந்திரம்பாதுகாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பத்திரிக்கைச் சுதந்திரத்தைக் காக்கும் வகையிலான உறுதியானநடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரதமர், துணைப் பிரதமர் ஆகியோரை சந்திக்கும் எதிர்க்கட்சிஎம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் வலியுறுத்துவார்கள்.
பரிதி இளம்வழுதி மீதான நடவடிக்கையை எதிர்த்து சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.திட்டமிட்டபடி 12ம் தேதி மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications