நரிக்குறவர்களிடம் "சிக்கிய" ராம கோபாலன்!

Subscribe to Oneindia Tamil

சேலம்:

கிறிஸ்த்துவ மதத்திற்கு மாறியதாகக் கூறப்படும் நரிக்குறவர் குடியிருப்புப் பகுதிக்குச் சென்ற இந்து முன்னணிஅமைப்பாளர் ராம கோபாலனை, நரிக்குறவர்கள் முற்றுகையிட்டு, திரும்பிப் போகுமாறு கோரினர். இதனால்அங்கு பதற்றம் ஏற்பட்டது.

சேலம், பஞ்சம்தங்கம் ஏரிக் கரையில் ஏராளமான நரிக் குறவர்கள் குடியிருந்து வருகிறார்கள். சமீபத்தில் இங்குவந்த கிறிஸ்த்துவ மதத் தலைவர் எஸ்றா சற்குணம், நரிக்குறவர்களை கிறிஸ்த்துவ மதத்திற்கு மாற்றி விட்டதாகஇந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம கோபாலன் புகார் கூறினார்.

இந்த நிலையில் இந்தப் பகுதிக்கு நேற்று அவர் வருகை தந்தார். ஆனால் அவரது வருகைக்கு அங்கு வரவேற்புகிடைக்கவில்லை. மாறாக நரிக்குறவர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு, கோஷமிட்டனர்.

மதப் பிரச்சினையை உருவாக்க வராதீர்கள். நாங்கள் கிறிஸ்த்துவ மதத்தைத் தழுவவில்லை என்று அவர்கள்கோஷமிட்டனர். இருப்பினும் அதைச் சமாளித்தவாறே, அவர்களிடம் பேசிய ராம கோபாலன், பணத்திற்காகவும்,பிற உதவிகளுக்காகவும் உங்களது சொந்த மதத்தை விட்டுக் கொடுக்காதீர்கள்.

உங்களுக்குத் தேவையான உதவிகளை அரசிடம் சொல்லி நான் செய்கிறேன் என்றார்.இருப்பினும் நரிக்குறவர்கள் தொடர்ந்து கோஷமிட்டவாறே இருந்ததால், போலீஸாரின் ஆலோசனையின் பேரில்ராம கோபாலன் அங்கிருந்து சென்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+