திருப்பதி கோயில் கருவறையில் லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோயில் கருவறையில் கடவுளைத் தரிசிக்கக் கூடுதல் நேரம் ஒதுக்கித் தருவதாக் கூறிபக்தர்களிடம் லஞ்சம் வாங்கிய தேவஸ்தான ஊழியர் ஒருவர் கையும், களவுமாகப் பிடிபட்டார்.
கோயில் கருவறையில் பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஊழியர் ஒருவர் பக்தர்கள்குழுவிடம் பணம் வாங்கியது கண்காணிப்புக் தொலைக்காட்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று அந்த ஊழியரை லஞ்சப்பணத்துடன் கைது செய்தனர். பின்னர் விசாரணையில் பக்தர்கள் கடவுளைத் தரிசிக்க கூடுதல் நேரம் ஒதுக்கித்தருவதற்கு லஞ்சம் வாங்கியதாக அந்த ஊழியர் ஒத்துக் கொண்டுள்ளார்.
எப்பொழுதும் கூட்டம் அதிகமாக இருக்கும் திருப்பதி கோயிலில் பக்தர்கள் மிகக் குறைவான நேரமே கடவுளைத்தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications