அறிக்கை கேட்டார் வாஜ்பாய்: தமிழக அதிகாரிகளுடன் ஆளுநர் தீவிர ஆலோசனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்து, முரசொலி பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான கைது உத்தரவு மற்றும் சட்டசபை வளாகத்திலேயே பரிதிஇளம்வழுதி கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பும் பணியில் தீவிரமாகஈடுபட்டுள்ளார் தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவ்.

சட்டமன்றச் செயலாளர் ராமராஜன், சட்டத்துறை செயலாளர் கிருஷ்ண குட்டி மற்றும் சில தமிழக அரசின் மூத்தஅதிகாரிகளை இன்று ராம்மோகன் நேரில் அழைத்து விசாரணை நடத்தினார். அவர்களிடம் சட்டசபையில் நடந்தஅனைத்தையும் விரிவாகக் கேட்டறிந்தார்.

தமிழக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்ச்சிகள், அதைத் தொடர்ந்து இந்து மற்றும் முரசொலி ஆசிரியர்கள்,நிருபர்களைக் கைது செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை, பரிதி இளம் வழுதியின் கைது, பெங்களூரில் இந்துபத்திரிக்கையின் ஆசிரியர் குடும்பத்தினரை தமிழக போலீசார் மிரட்டியது ஆகியவை குறித்து டெல்லியில் திமுக,பா.ம.க எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களிடம் வாஜ்பாயை நேரில் சந்தித்து புகார் கூறினர்.

இதையடுத்து ஆளுநர் ராம்மோகன் ராவிடம் இது தொடர்பாக அறிக்கை கேட்பதாகவும் அதன் பின்னர் உரியநடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் உறுதியளித்தார்.

சொன்னதைப் போவவே தமிழக சட்டசபை விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு ஆளுநருக்கு பிரதமர்அலுவலகத்தில் இருந்து அவசர பேக்ஸ் கடிதம் அனுப்ப்பட்டது.

இதையடுத்து ஆளுநர் ராவ், சட்டமன்றச் செயலாளர் ராமராஜன், சட்டத்துறை செயலாளர் கிருஷ்ண குட்டி மற்றும்தொடர்புடைய அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்தினார். அவர்களிடம் சட்டசபையில் நடந்தஅனைத்தையும் விரிவாகக் கேட்டறிந்தார்.

எற்கனவே மத்திய அரசின் அதிருப்திக்கு ஆளாகியுள்ள ராவ், இந்த விஷயத்தில் விரைவில் தனது அறிக்கையைஇன்று நாளைக்குள் பிரதமருக்கு அனுப்பி வைப்பார் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, இந்து தலைமை ஆசிரியர் ராமின் சகோதரரும், பத்திரிகையின் இணை நிர்வாக இயக்குநருமான முரளிஇன்று தொலைபேசியில் ராம் மோகன் ராவுடன் பேசினார். அப்போது இந்து அலுவலகம் மற்றும் நிருபர்கள்வீடுகளின் முன்பும், மப்டி உடையில் போலீசார் நின்று கொண்டு தொல்லை தந்து கொண்டிருப்பது குறித்துப் புகார்கூறினார்.

டெல்லியில் பிரதமரை திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின், மத்தியஅமைச்சர் டி.ஆர்.பாலு மற்றும் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட அனைத்து திமுக எம்பிக்கள்,எம்.எல்.ஏக்களும், பா.ம.க. தலைவர் மணி தலைமையிலான அக் கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்களும் மத்திய அமைச்சர்சண்முகம் உள்ளிட்டோரும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தில் இருக்கும் வாஜ்பாய், திரும்பி வந்த பின் இந்த அறிக்கை மீது ஏதாவதுநடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+