இந்து மீது தமிழக அரசு மீண்டும் அவதூறு வழக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்து நாளிதழ் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் ஆகியுள்ளது.

இந்து ஆசிரியர் மற்றும் நிருபர்களைக் கைது செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்தவுடன் இந்தபுதிய வழக்கை தமிழக அரசு தொடர்ந்தது.

கடந்த ஏப்ரல் 13ம் தேதி வெளியான இந்து நாளிதழில் வெளியாகியிருந்த கட்டுரை, அரசுக்கும், சட்டசபைக்கும்அவதூறை ஏற்படுத்தும் விதத்தில் இருப்பதாகக் கூறி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அரசுவழக்கறிஞர் டி.வி.கணேஷ் இந்த வழக்கைத் தொடுத்துள்ளார்.

அரசு வழக்கறிஞரின் மனுவில், மக்கள் நீதிமன்றமே எதிர்க்கட்சிகளுக்கு ஒரே வழி என்ற தலைப்பில் இந்துநாளிதழில் வெளியான கட்டுரையில் சட்டசபைக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் பொய்யானவை, கற்பனையின் அடிப்படையில்எழுதப்பட்டவை, உண்மைக்குப் புறம்பானவை.

சட்டசபையில் உறுப்பினர்களுக்கு எந்தவித உரிமையும், உதவியும் இல்லாதது போன்று கற்பனை செய்துகட்டுரையை எழுதியுள்ளனர். எந்த முக்கியப் பிரச்சினையிலும் விவாதம் நடத்த அரசு அனுமதிப்பதில்லை என்றும்,தேவையில்லாத பிரச்சினைகளில் மட்டுமே விவாதம் நடத்த சட்டசபை பயன்படுத்தப்படுகிறது என்றும்கட்டுரையில் தவறாக எழுதப்பட்டுள்ளது.

சட்டசபை விவாதங்களின்போது எதிர்க்கட்சியினரை ஒடுக்கும் விதத்தில் ஆளுங்கட்சி செயல்படுவதாகவும்,எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல்வளை நெரிக்கப்படுவதாகவும் செய்தியில் கூறப்பட்டுள்ளது. முதல்வர் மீதும்,ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மீதும் பொய்யான புகார்களைக் கூறியுள்ளதன் மூலம் முதல்வரின் நற்பெயருக்குகளங்கம் விளைவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்திய குற்றவியல் சட்டம் 500 மற்றும் 501ன் கீழ் ஆசிரியர் என்.ரவி, எக்சிகியூட்டிவ் ஆசிரியர் மாலினிபார்த்தசாரதி, பதிப்பாளர் ரங்கராஜன், கட்டுரை ஆசியர் வி.ஜெயந்த் ஆகியோருக்குத் தண்டனை வழங்க வேண்டும்என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

மனுவைப் பரிசீலித்த நீதிபதி ஜெயபால், டிசம்பர் 22ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறிசம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

ஏப்ரல் 13ம் தேதி வெளியான இந்தக் கட்டுரைக்காக இந்து பத்திரிக்கைக்கு தண்டனை வழங்க உரிமைக் குழுவின்பரிந்துரைப்படி ஒரு வார கால சிறைத் தண்டனை வழங்க சபாநாயகர் முடிவு செய்தார். ஆனால் அப்போதுகுறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, என்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் குறை கூறப்பட்டதால், தண்டனை வழங்கவேண்டாம் என்று கோரினார். இதைத் தொடர்ந்து தண்டனை கைவிடப்பட்டது.

13ம் தேதி வெளியான தலையங்கத்திற்காக 15 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம்இதற்கு தடை விதித்தது. தடை விதிக்கப்பட்ட அதே நாளில், நீதிமன்றத்தில் அரசு சார்பில் வழக்குதொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்து நாளிதழ் மீது 17 அவதூறு வழக்குகள் உள்ளன. இப்போது அது18 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் பல்வேறு பத்திரிக்கைகளின் மீதும் தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்குகள் கிட்டத்தட்ட 30க்கும் மேல்என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+