சந்திரிகா- ரணில் இன்று சந்திப்பு
கொழும்பு:
புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து அதிபர் குமாரதுங்காவைச் சந்திக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஒப்புக் கொண்டுள்ளார். இன்று இந்தச் சந்திப்பு நடக்கிறது.
நாட்டில் எமர்ஜென்சியை அமலாக்கி வாபஸ் பெற்று, பாதுகாப்பு, உள்துறை அமைச்சகங்களைசந்திரிகா தன் வசம்எடுத்துக் கொண்ட பின்னர் இருவருக்கும் இடையே நடக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நேற்று இலங்கை அரசு அறிவித்தது.இதனால் பேச்சுவார்த்தைகள் நிச்சயம் பாதிக்கப்படும் என பிரதமர் ரணில் தெரிவித்தார்.
இந் நிலையில் ரணிலுடன் பேச்சு நடத்த தயார் என்றும், சந்திக்க வருமாறும் அவருக்கு சந்திரிகா அழைப்புவிடுத்தார்.
இந்த அழைப்பை ரணில் ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து இன்று அவர் சந்திரிகாவைச் சந்திக்கிறார். இந்தச் சந்திப்பின்போது புலிகளுடனா பேச்சுவார்த்தைகள் குறித்தே ணிக்கியமாக விவாதிக்கப்படும் என அரசியல் சட்டத்துறை அமைச்சர் பெரிஸ் தெரிவித்தார்.மேலும் தேர்தலைச் சந்திக்கவும் ரணில் அரசு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications