புலி ஆதரவு வழக்கில் பழ. நெடுமாறன் விடுதலை
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் பேசியதாகக் கூறப்பட்ட வழக்கில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 1992ம் ஆண்டு திண்டுக்கல்லில் தமிழர் தேசிய இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. அதில், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் நெடுமாறன் பேசியதாகக் கூறி திண்டுக்கல் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நெடுமாறன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி அவரை விடுவித்தது. இந்த வழக்கின் தீர்ப்புக்காக நேற்று நெடுமாறன் திண்டுக்கல் கொண்டுவரப்பட்டிருந்தார். இதில் விடுதலை செய்யப்பட்டாலும் கூட பொடா வழக்கில் இன்னும் விடுதலையாகாத காரணத்தால், அவர் மீண்டும் கடலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications