ஜெவுடன் பேச வில்லை: வாஜ்பாய்
டெல்லி:
இந்து மற்றும் முரசொலி பத்திரிக்கைகளின் மீது தமிழக சட்டசபை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர்ஜெயலலிதாவுடன் பேசவில்லை என்று பிரதமர் வாஜ்பாய் கூறினார்.
ஒரு வாரகால அரசு முறைப் பயணமாக ரஷ்யா, தஜிகிஸ்தான், சிரியா ஆகிய நாடுகளுக்கு கிளம்பும் முன் விமானநிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்த விஷயத்தில் அதே நேரத்தில் ஒவ்வொருவரும் தங்களது கடமையை உணர்ந்து லட்சுமண ரேகைக்கோட்டைத் தாண்டாமல் செயல்பட வேண்டும்.
டெல்லியில் சார்க் நாடுகளுகளின் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவந்துள்ள பாகிஸ்தான் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஷேக் ரஷீதுடன், மாநாட்டில் கை குலுக்கினேன்.மற்றபடி காஷ்மீர் குறித்து எதுவும் பேசவில்லை.
காஷ்மீர் பிரச்சனை குறித்து ஹூரியத் தலைவர்களுடன் அத்வானி பேச்சுவார்த்தை நடத்துவதில்அமைச்சரவைக்குள் கருத்து வேறுபாடுகள் ஏதும் இல்லை என்றார்.
பிரதமரின் இந்த ரஷ்யப் பயணத்தின் போது ராணுவம் மற்றும் விண்வெளித் தொழில்நுட்பம் தொடர்பான பலமுக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார். போயிங் 747 சிறப்பு விமானத்தில் வெளிநாட்டுப் பயணம்கிளம்பிய பிரதமருடன் 100 பேர் அடங்கிய வர்த்தகக் குழுவும் செல்கிறது.
கடந்த 15 ஆண்டுகளில் சிரியா செல்லும் முதல் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications