ஏட்டிக்குப் போட்டி போராட்டம்
பாண்டிச்சேரி:
இந்து மற்றும் முரசொலிக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில்நாளை திமுகவினர் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தவுள்ள நிலையில், பாண்டிச்சேரியில் நாளை மறுநாள்தாங்கள் போராட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் அறிவித்துள்ளன.
இது குறித்து புதுவை காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாளை மறுநாள் புதுவை மாநிலத்தில் மதச்சார்பின்மை கட்சிகளின் சார்பாக போராட்டம் நடத்தப்படும். இதில்காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஜனதா தளம், இந்தியக் குடியரசுக் கட்சி மற்றும்இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆகியவை கலந்து கொள்ளும்.
புதுவை திமுகவினர் மற்ற கட்சிகளை கலந்தலோசிக்காமல், தன்னிச்சையாக போராட்டத்தை அறிவித்ததால் தான்மதச்சார்பற்ற கட்சிகளின் சார்பாக தனியே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications