மப்டி போலீஸ் தொல்லை: மத்தியப் படை பாதுகாப்பு கேட்கிறார் ராம்
சென்னை:
இந்து பத்திரிக்கை அலுவலகத்திற்கும், தமிழக அரசு கைது வாரண்ட் பிறப்பித்த 5 பத்திரிக்கையாளர்கள்வீட்டிற்கும் மத்திய் படைகளின் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இந்து தலைமை ஆசிரியர் ராம் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இது தொடர்பாக துணைப்பிரதமர் அத்வானிக்கு அவர் கடிதம் எழுதவுள்ளார்.
தமிழக சட்டசபையின் கைது நடவடிக்கைக்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இன்றுசெய்தியாளர்களிடம் ராம் கூறியதாவது:
இந்து அலுவலகத்தின் எதிரேயும், எங்கள் நிருபர்களின் வீடுகளின் முன்பும் சாதாரண உடையில் ஏராளமானபோலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். எங்களின் ஒவ்வொரு அசைவயும் அவர்கள் கண்காணித்து வருகின்றனர்.எங்களை அச்சுறுத்தும் நோக்கத்திலேயே அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மப்டி போலீசாரின் நடவடிக்கைகள் நிருபர்களின் குடும்பத்தினரை மன உளைச்சலில் தள்ளியுள்ளது.
இதனால் இந்து அலுவலகத்துக்கும், கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட இந்து பத்திரிக்கையாளர்களின்குடும்பத்தினருக்கும் மத்தியப் படைகளின் பாதுகாப்பை மத்திய அரசு அளிக்க வேண்டும்
மேலும் இந்து பத்திரிகையாளர்களின் கார்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.பத்திரிகையாளர்களைக் கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள போதும் காவல் துறையின் கெடுபிடிதொடருகிறது. இது குறித்து துணைப் பிரதமர் அத்வானிக்கு விவரமாக கடிதம் எழுதுவேன்.
அதில், இந்து அலுவலகத்திலும், பெங்களூரில் எங்கள் குடும்பத்தினர் காரில் சென்ற போதும் தமிழக போலீசார்மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து முழு விவரத்தையும் விளக்கமாக எழுதுவேன் என்றார்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications