இயல், இசை, நாடக மன்ற தலைவராக பி.பி.ஸ்ரீனிவாஸ் நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவராக பிரபல பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் இயல், இசை , நாடக மன்றத் தலைவராக பிரபல பின்னணிப் பாடகர் டி.எம்.செளந்தரராஜன் இருந்து வந்தார். அவரது பதவிக்காலம் முடிந்ததையடுத்து தற்போது அப்பதவிக்கு பி.பி. ஸ்ரீனிவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
73 வயதாகும் பி.பி. ஸ்ரீனிவாஸ், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். 1000க்கும் மேற்பட்ட தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம், இந்தி படங்களில் பாடியுள்ளார். பல மொழிகள் தெரிந்த இவர் அந்த மொழிகளில் கவிதை பாடும் அளவுக்கு புலமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னடத்தில் நடிகர் ராஜ்குமாருக்கு ஆரம்ப காலத்தில் இவர்தான் அனைத்துப் பாடல்களையும் பாடி வந்தார். அதேபோல, தமிழில் நடிகர் ஜெமினி கணேசனுக்காக ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications