கம்பிகள் ஏற்றப்பட்ட லாரி மீது வேன் மோதி 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் கம்பிகள் ஏற்றப்பட்ட லாரியின் மீது வேன் மோதியதில் அதில் பயணம்செய்த 5 பேர் பலியாயினர். 3 பேர் படுகாயமடைந்தனர்
இரும்புக் கம்பிகள் ஏற்றப்பட்ட ஒரு லாரி திண்டுக்கல் சென்று கொண்டிருந்தது. நேற்றிரவு சேஷலூர் என்றஇடத்தில் அந்த லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் ஏற்றப்பட்ட கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டிருந்தன.
அப்போது பாண்டிச்சேரியில் இருந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள பட்டிதனம்பட்டி என்ற ஊருக்குச் சென்றுகொண்டிருந்த வேன் அந்த லாரி மீது மோதியது. அதில் அதில் இருந்த கம்பிகள் வேனை துளைத்துக் கொண்டுஉள்ளே நுழைந்தன.
இதில் கம்பிகள் குத்தியும், வேன் நொறுங்கியும் அதிலிருந்த 5 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். மேலும் 3 பேர்படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications