நீதிமன்றத்தில் வைகோ, நிருபர்களிடம் போலீஸ் கெடுபிடி

Subscribe to Oneindia Tamil

பூந்தமல்லி:

பொடா வழக்கு விசாரணைக்கு வந்த வைகோ, நிருபர்களுக்குப் பேட்டியளிக்கக் கூடாது என்றும், வைகோ நீதிமன்றவளாகத்தில் சாப்பிடக் கூடாது என்றும் கூறி போலீஸார் கடும் கெடுபிடி செய்தனர்.

இந்து பத்திரிக்கை விவகாரத்தால் எல்லா நிருபர்களிடம் கெடுபிடி காட்ட ஆரம்பித்துள்ள போலீசார் இன்றுபூந்தமல்லியில் நிருபர்களிடம் பாய்ந்தனர்.

பொடா வழக்கு விசாரணைக்காக வைகோ உள்ளிட்ட 8 பேர் இன்று பூந்தமல்லி நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேந்திரன் நாளை காலை 10.30க்கு விசாரணையை ஒத்திவைத்தார். இதையடுத்து வைகோவும் 8 மதிமுகவினரும் நீதிமன்ற வளாகத்தில் உணவருந்த முயன்றனர்.

அப்போது தலையிட்ட போலீஸார், வைகோ உள்ளிட்ட 8 பேரும் நீதிமன்ற வளாகத்தில் சாப்பிடத் தடை விதிக்கநீதிபதியிடம் கோரினர்.

அதற்கு நீதிபதி, நீதிமன்றத்திற்குக் கொண்டு வரும் வரைதான் அவருக்கு உங்களுடைய பாதுகாப்பு. அதன் பிறகுநீதிமன்றமே அவரது காவலுக்குப் பொறுப்பு. எனவே இதில் நீங்கள் தயிைைட முடியாது. வைகோ எப்போதும்போல் நீதிமன்ற வளாகத்தில் சாப்பிடலாம் என்றார்.

இதன் பின்னரே போலீசார் அமைதியாயினர்.

இதன்பிறகு வைகோவிடம் பேட்டி எடுக்க முயன்ற நிருபர்களைப் போலீஸார் தடுத்தனர். நிருபர்கள் யாரும்நீதிமன்ற கழிப்பறையைப் பயன்படுத்தக்கூடாது என்றும் கூறினர். அதன் பிறகு நிருபர்கள் வைகோவின்வழக்கறிஞரிடம் கேள்விகளை எழுதிக் கொடுத்து வைகோவின் பதிலைப் பெற்றனர்.

நீதிமன்றத்தில் நிருபர்களின் மீது போலீஸார் விதித்துள்ள கட்டுப்பாடு பற்றி வைகோ கூறுகையில்,

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும் தமிழக அரசுக்குப் புத்தி வரவில்லை. தமிழகத்தில் அறிவிக்கப்படாதநெருக்கடி நிலை நிலவுகிறது. இதை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டசும் சுட்டிக்காட்டியுள்ளார். நீதிமன்றத்தில் நீதிபதிக்குத்தான் அதிகாரமே தவிர போலீஸீக்குக் கிடையாது என்றார்.

இந் நிலையில் நீதிமன்றத்தில் நிருபர்கள் வழக்கமாக நிற்கும் மரத்தின் கிளைகளைப் போலீஸார் வெட்டியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+