பரிதியை விடுதலை செய்ய கோரி திமுக ஹேபியஸ் கார்பஸ் வழக்கு
சென்னை:
சபாநாயகரின் தீர்ப்பையடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ. பரிதிஇளம்வழுதியை விடுதலை செய்யக் கோரியும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரியும் ஹேபியஸ்கார்பஸ் (ஆட்கொணர்வு) மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி தாக்கல்செய்துள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதிபதி சண்முகம், நீதிபதி ஏ.கே.ராஜன்ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடந்தது.
அப்போது ஆற்காடு வீராசாமி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பரிதி முதலில் சட்டசபை கூட்டத்தொடரிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். தற்போது சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டு இரண்டாவதுமுறையாக தண்டிக்கப்பட்டுள்ளார்.
ஒரே பிரச்சினைக்காக எப்படி அவரை இரண்டு தண்டனை அளிக்க முடியும்?. எனவே அவருக்கு விதிக்கப்பட்டசிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் சுப்பிரமணியம் கூறுகையில், சட்டமன்ற விதிமுறைகள் தொடர்பான விவரத்தைபிற்பகலில் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதாகக் கூறி கால அவகாசம் கேட்டார். இதை அனுமதித்த நீதிபதிகள், அரசுவழக்கறிஞரின் பதிலுக்குப் பின் மனு மீது முடிவைத் தெரிவிப்பதாகக் கூறினர்.
கடந்த 7ம் தேதி சட்டசபையில் இரண்டு பரபரப்பான தீர்ப்புக்களை சபாநாயகர் காளிமுத்து அறிவித்தார். இந்து,முரசொலி பத்திரிக்கையாளர்களை கைது செய்யும் தீர்ப்பு ஒன்று, மற்றொன்று பரிதியை கைது செய்யும் உத்தரவு.இதையடுத்து பரிதி சட்டசபை வளாகத்திலேயே கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்டார்.
இதையடுத்து பரிதியை விடுவிக்கக் கோரி ஆற்காடு வீராசாமி நேற்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில் அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர் குமாரதாஸ் என்பவரைக் கடந்த ஜனவரி 30ம் தேதி நடந்த சட்டசபைக்கூட்டத்தின்போது கொல்ல முயற்சித்ததாகக் கூறி, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உரிமைக் குழுவுக்குஉத்தரவிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பரிதியை அந்த சட்டமன்றக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து இன்னொருதீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட மற்றொரு தீர்மானத்தில் பரிதி மீது குற்றவழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து போலீஸார் ஜனவரி 31ம் தேதி பரிதியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில், பிப்ரவ 13ம் தேதி பரிதியை ஜாமீனில் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந் நிலையில், உரிமைக் குழு உத்தரவுப்படி குழு முன்பு ஆஜரான பரிதி, விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்துகடந்த 7ம் தேதி சபாநாயகர் காளிமுத்து, பரிதிக்கு 30 நாட்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த உத்தரவு சட்டவிரோதமானது. போலீஸில் வழக்கு நிலுவையில் உள்ளபோது, சட்டசபை அதில் தலையிடமுடியாது. ஒரே சமயத்தில் இரண்டு விதமான விசாரணை நடத்துவது அரசியல் சட்டத்தின் 20(2)வது பிரிவைமீறுவதாகும். ஏற்கனவே பட்ஜெட் கூட்டத் தொடரிலிருந்து நீக்கப்பட்டு தண்டிக்கப்பட்டு விட்ட பரிதியை மீண்டும்தண்டிக்க முடியாது.
எனவே பரிதியை உடனடியாக கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். மேலும் அவரை ஜாமீனில்விடுதலை செய்யவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications