நீர் பங்கீடு: தமிழக, கேரள பேச்சுவார்த்தை சுமூகம்!
சென்னை:
நீர்ப் பங்கீடு தொடர்பாக தமிழக, கேரள அமைச்சர்களிடையே சென்னையில் நடந்த முதல் கட்டப் பேச்சுவார்த்தைசுமூகமாகவும், திருப்தி தரும் வகையிலும் முடிவடைந்துள்ளது.
பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட ஒப்பந்தம் தொடர்பாக தமிழக, கேரள அமைச்சர்களிடையே சென்னையில்நடந்தது. அது இரு தரப்பிலும் திருப்திகரமாக இருந்ததாக இரு மாநில அமைச்சர்களும் கூறியுள்ளனர். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது.
தமிழகம் மற்றும் கேரளாவில் ஓடும் அண்ணாமலையார், நீரார், சோலையார், பரம்பிக்குளம், பாலாறு, ஆழியாறுஆகிய ஆறுகளின் நீரை, குடிநீர், விவசாயம் மற்றும் மின்சாரத்திற்காகப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக கடந்த1958ம் ஆண்டு இரு மாநிலங்களுக்கிடையே ஒப்பந்தம் போடப்பட்டது.
30 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட வேண்டிய இந்த ஒப்பந்தம் 1988ம் ஆண்டுடன் முடிவடைந்தபோதும்அது புதுப்பிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து இரு மாநிலங்களுக்கிடையேயும் நீர்ப் பகிர்வு தொடர்பாகபிரச்சினை இருந்து வந்தது.
இதுதொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 10ம் தேதி சென்னையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது 6 பேர்கொண்ட கூட்டு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் இரு மாநிலங்கைளயும் சேர்ந்த தலா 3 பேர்இடம் பெற்றனர். இந்தக் குழுவினர் ஆய்வு நடத்தி அறிக்கையை இரு அரசுகளிடம் கொடுத்தனர்.
இந்த அறிக்கை குறித்து பரிசீலிப்பதற்காக சென்னையில் நேற்று இரு மாநில அமைச்சர்களின் கூட்டம் நடந்தது.இதில் தமிழகத்தின் சார்பில் நிதியமைச்சர் பொன்னையன், பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்ஆகியோரும், கேரளத்தின் சார்பில் நிதியமைச்சர் சங்கரநாராயணன், நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.எம்.ஜேக்கப்ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சுமார் 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் இரு தரப்பினரும்திருப்தியாக வெளியே வந்தனர். அமைச்சர் பொன்னையன் பேச்சுவார்த்தை குறித்துக் கூறுகையில், மிகவும்சுமுகமாக இருந்தது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 19ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளதுஎன்றார்.
ஜேக்கப் கூறுகையில், கிட்டத்தட்ட கருத்தொற்றுமை ஏற்படும் அளவுக்கு நெருங்கி விட்டோம். இப்பிரச்சினையில்அடுத்த கூட்டத்தில் இறுதித் தீர்வு ஏற்படும் என்று இரு மாநிலங்களும் நம்புகின்றன. கூட்டத்தில் நடந்தபேச்சுவார்த்தை மிகவும் திருப்திகரமாக இருந்தது.
இந்தக் கூட்டத்தில் முல்லைப் பெரியாறு விவகாரம், பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்படவுள்ள அணை குறித்துப்பேசவில்லை என்றார் அவர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications