முதுமலை முகாம்: கோயில் யானைகள் லாரிகளில் ஏறாமல் பிடிவாதம்
மதுரை:
யானைகள் லாரியில் ஏறுவதற்கு மறுத்து வருவதால் வரும் 16ம் தேதி முதல் முதுமலையில் நடைபெறவிருக்கும்யானைகள் முகாம் திட்டமிட்டபடி நடக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 71 கோயில் யானைகளுக்கு முதுமலை வனப்பகுதியில் சுகாதார முகாம் நடத்த தமிழக அரசுமுடிவு செய்தது. இதையடுத்து அனைத்து கோயில்களும், 16 தேதிகளுக்குள் தங்களது யானைகளை லாரிகளில்ஏற்றி முதமலைக்கு அனுப்ப வேண்டும் உத்தரவிடப்பட்டது.
இந் நிலையில் பல்வேறு கோவில்களிலும் லாரிகளில் ஏறுவதற்கு யானைகள் மறுத்து வருகின்றன. கடலை மிட்டாய்உருண்டைகள், கரும்புக் கட்டு, வாழைப்பழம் என எதைக் கொடுத்தும் யானைகளை மசிய வைக்க முடியவில்லை.
யானைகளை அடிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதால், யானைப் பாகன்களின் வாய்மொழி உத்தரவுக்குயானைகள் அடிபணிய மறுப்பதாக கோயில் நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.
திருப்பரங்குன்றத்தில் உள்ள யானை மட்டும் மலைகளில் ஏறிப் பழக்கமுடைய யானைகள் என்பதால் அவைலாரியில் ஏற்றுவதற்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. ஆனால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்படதமிழகத்தின் பெரும்பலான கோவில் யானைகளை லாரிகளில் ஏற்றுவதில் அதிகாரிகளுக்கு பெரும் சிரமம்ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர்கள் கலங்கிப் போயுள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் யானைகளை லாரியில் ஏற்றதனி மேடை அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 4 மணி நேரம் முயன்றும் யானைகளை ஏற்ற முடியவில்லை.யானைகளை தேவையில்லாமல் துன்புறுத்துவதாகவும் சில பக்தர்கள் புகார் கூறுகின்றனர். இதே நிலை தான் மற்றகோவில்களிலும் நிலவுகிறது.
தனது தோஷ நிவர்த்திற்காகவே கஜமுக பூஜை நடத்த, யானைகளை வரவழைக்க முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டதாக எதிர்க் கட்சியினர் குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள்












Click it and Unblock the Notifications