ஜெ. எதிர்ப்பு: அத்வானிக்கு கடிதம்
சென்னை:
சட்டமன்ற அளித்த தீர்ப்பு குறித்து நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது என்று தமிழக சட்டசபை சபாநாயகர் காளிமுத்து கூறினார்.
இந்து அலுவலகத்துக்கும் அதன் தலைமை ஆசிரியர் ராம் மற்றும் 5 நிருபர்களின் வீடுகளுக்கு மத்தியப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பை வழங்கும் முடிவுக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக துணைப் பிரதமர் அத்வானிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
இந்துவுக்கு மத்தியப் படை பாதுகாப்பு வழங்கப் போவதாக, மத்திய உள்துறை இணை செயலரிடம் இருந்து தகவல் வந்துள்ளதாக, தமிழக காவல்துறைத் தலைவர் எனக்குத் தெரிவித்துள்ளார். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
உச்ச நீதிமன்ற உத்தரவைத் தமிழக அரசு முழுமையாக மதிக்கிறது. சட்டசபையில் சபாநாயகர் பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்றாமல் தமிழக காவல்துறை நிறுத்தி வைத்துள்ளது.
தமிழக அரசு சட்டம், ஒழுங்கைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறையைச் செலுத்தி, அமைதியான மாநிலங்களில் ஒன்றாகப் பெயரெடுத்துள்ளது. இங்கு இந்து அலுவலகத்திற்கோ, ராமின் பாதுகாப்பிற்கோ எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லை.
மேலும் அவர் ஏற்கனவே தமிழக அரசின் ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பில் உளளார்
உச்ச நீதிமன்றத்தில் இந்து நிறுவனத்தினர் தொடுத்த வழக்கிலும் கூட, தமிழகத்தில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவோ, மிரட்டல் இருப்பதாகவோ தெரிவிக்கவில்லை.
நிலைமையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இப்படியொரு நாடகத்தை என்.ராம் ஆடுகிறார். பொதுமக்களின் அனுதாபத்தைப் பெற அவர் முயற்சிப்பதன் வெளிப்பாடே இந்த நாடகம்.
இந்து அலுவலகத்திற்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு கொடுப்பது என்ற முடிவு தேவையற்றது, துரதிர்ஷ்டவசமானது. மத்திய, மாநில அரசுகளிடையிலான உறவை இது பாதித்து விடும்.
தவறான தகவல்களின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. எனவே மத்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அத்வானிக்கு எழுதிய கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் இந்தக் கடித நகல் நள்ளிரவில் முதல்வர் அலுவலகத்தில் இருந்து அனைத்து பத்திரிக்கைகளுக்கும் வழங்கப்பட்டது.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications