மனித சங்கிலி போராட்டம்- கருணாநிதி--ராம் பங்கேற்பு
சென்னை:
தமிழக அரசு ஜனநாயக உரிமைகளை நசுக்குவதாகவும், பத்திரிக்கை சுதந்திரத்தைப் பறிப்பதாகவும் கூறிஅனைத்து எதிர்க்கட்சியினர் (பா.ஜ.க. தவிர) பங்கேற்ற மனித சங்கிலிப் போராட்டம் இன்று தமிழகம் முழுவதும்நடந்தது.
சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியும் மனித சங்கிலியில் கைகோர்த்தார். தமிழகம் முழுவதும் நடந்தபோராட்டத்துக்கு அவரே தலைமையும் தாங்கினார்.
இந்து மற்றும் முரசொலி பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான சட்டசபை நடவடிக்கையைக் கண்டித்தும், பரிதிஇளம்வழுதியைக் கைது செய்ததைக் கண்டித்தும், மாவட்ட மற்றும் வட்டத் தலைநகரங்களில் இந்த மனிதச்சங்கிலிப் போராட்டம் நடத்த திமுக அழைப்பு விடுத்தது.
இதற்கு காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பிற்பகலில் இப் போராட்டம் நடந்தது.
சென்னையில் இந்து அலுவலகத்தில் இருந்து ஆரம்பித்த இந்த மனித சங்கிலிப் போராட்டம், அண்ணாசாலை,வாலாஜா சாலை வழியாக சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் இல்லம் வரை 3 கி.மீ தூரம் நீடித்தது.
அண்ணா சாலையில், அண்ணா சிலை அருகே கருணாநிதி தலைமையில், இந்து ஆசிரியர் ராம், திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்செயலாளர் வரதராஜன், மதிமுக மத்திய அமைச்சர்கள் செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன், விடுதலைச் சிறுத்தைகள்தலைவர் திருமாவளன் உள்ளிட்டோர் கைகோர்த்து நின்றனர்.
இந்து அலுவலகம் எதிரே காங்கிரஸ் தலைவர்கள் ஜெயந்தி நடராஜன், தங்கபாலு ஆகியோர் கைகோர்த்தனர்.
இதேபோல, திருவண்ணாமலையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினும், ஈரோட்டில் காங்கிரஸ் செயல்தலைவர் இளங்கோவனும், ராமநாதபுரத்தில் காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணனும், திண்டிவனத்தில்பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசும், கோவையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜி.கே.வாசனும்மனிதச் சங்கிலிப் போராட்டத்திகு தலைமை தாங்கினர். புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும்போராட்டத்தில் பங்கேற்றார்.
சுமார் 2 மணி நேரம் இந்த மனித சங்கிலிப் போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான பத்திரிக்கையாளர்களும்கலந்து கொண்டனர்.
இன்று காலை விருதுநகரில் பல்வேறு எதிர்க்கட்சியினர் கலந்து கொண்ட மனிதச் சங்கிலி நடந்தது. இதில்முன்னாள் திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.
புதுவையில் நாளை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனித சங்கிலி போராட்டம் நடத்துகின்றனர். இன்றுதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் மனித சங்கிலிப் போராட்டம் நடத்துகின்றனர்.
-
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications