மத்திய படை பாதுகாப்பு தேவையில்லை: இந்து
சென்னை:
இந்து அலுவலகம், ஆசிரியர் ராம் மற்றும் 4 நிருபர்களின் வீடுகளுக்கு மத்தியப் படைகளின் பாதுகாப்பைக்கோரிய இந்து நிறுவனம் அந்தக் கோரிக்கையை வாபஸ் பெற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாகவும், மாநில போலீசால் இந்துவுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும்முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசிடம் உத்தரவாதம் தந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தலைமைஆசிரியர் என்.ராம் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், துணைப் பிரதமர் அத்வானிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில்இந்துவுக்கு முழு பாதுகாப்பு தரப்படும் என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவை மதித்து நடப்பதாகவும் குறிப்பிட்ள்ளார்.
சட்டமன்றத்தின் விதிகளை விட நீதித்துறையின் மாண்பும், அதிகார எல்லையும் விரிந்தது, பரந்தது என்பதைமுதல்வர் ஒப்புக் கொண்டு விட்டது மகிழ்ச்சி தருகிறது. மேலும் அடிப்படை உரிமைகள் விஷயத்தில் அரசியல்சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்க ஜெயலலிதா ஒப்புக் கொண்டிருக்கிறார்.
அரசியல் சட்டத்தை மதித்து ஒரு நல்ல முடிவு எடுக்க முன் வந்த ஜெயலலிதாவை நான் பாராட்டுகிறேன்.
முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனைப் போல, தங்களுக்கு வானளவிய அதிகாரம் இருப்பதாக நினைத்துக்கொண்டு தவறான நடவடிக்கைகளில் இறங்கிய முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்புக்குப்பணிந்தது மகிழ்ச்சி தருகிறது.
இதனால் இந்தப் பிரச்சனை முடிவுக்கு வருவதாகவே நினைக்கிறேன். இந் நிலையில் மத்தியப் படை பாதுகாப்புதேவையில்லை என்று கருதுகிறோம். இது தொடர்பாக அத்வானிக்கு கடிதம் அனுப்ப உள்ளேன் என்றுகூறியுள்ளார் ராம்.
முன்னதாக நிருபர்களிடம் பேசுகையில், இந்த விவகாரத்தை இந்து அளவுக்கு மீறி பெரிதாக்கவும் இல்லை. அதுபோன்ற செயல்கள் எங்களுக்குத் தெரியாது. எனக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள உண்மை தான்.எல்.டி.டி.ஈ. விவகாரம் காரணமாக எனக்கு முன்பிருந்தே அந்தப் பாதுகாப்பு உள்ளது. இது ஒன்றும் இப்போதுவழங்கப்பட்ட பாதுகாப்பு அல்ல என்றார் ராம்.
உடனிருந்த இந்து தலைமை நிருபர் ஜெயந்த் கூறுகையில், எனக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட உடன்நான் வெளியே வந்து போலீசை சந்திக்கத் தயாராகவே இருந்தேன். ஆனால், எனது நிர்வாகம் அதைத்தடுத்துவிட்டது. இதனால் கைதாகாமல் தப்பினேன். என்னைப் பாதுகாப்பில் வைத்திருந்த நண்பர்களுக்கு நன்றி.
ஆனால், இந்த அரசில் எதுவும் நடக்கலாம். எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என்றே நினைக்கிறேன்என்றார்.
முன்னதாக என்.ராமின் கோரிக்கையை ஏற்று இந்து அலுவலகம், அதன் தலைமை ஆசிரியர் என்.ராம் வீடு மற்றும்4 இந்து நிருபர்களின் வீடுகளுக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பை வழங்க மத்திய அரசுமுடிவு செய்திருந்தது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications