செயற்கை மழை முயற்சிகள் தொடங்கின
சென்னை:
சென்னை நகரில் செயற்கை மழை பெய்விப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தீவிரமாகியுள்ளது. மாநிலம் முழுவதிலும் நல்ல மழை பெய்து வந்தாலும்சென்னை நகரில் மட்டும் மழைப் பொழிவு குறைவாகவே உள்ளது. மழை இல்லாவிட்டாலும் கூட நகரில்எப்போதும் மேகமூட்டம் நிலவி வருகிறது.
இதைத் தொடர்ந்து செயற்கை மழை பெய்விப்பதற்கான முயற்சிகளில் சென்னை பெருநகர குடிநீர் வாரியம்(மெட்ரோ வாட்டர்) இறங்கியுள்ளது. முதல் கட்டமாக செயற்கை மழை பெய்விப்பதற்கான கருவிகளைவாங்கியுள்ளனர்.
இந்தக் கருவிகள் மெட்ரோ வாட்டரின் ஆறு அலுவலகக் கட்டடங்களில் நிறுவப்பட்டுள்ளன. இது தொடர்பாகமெட்ரோ வாட்டர் நிறுவன நிர்வாக இயக்குநர் வி.தங்கவேலு கூறுகையில்,
கடந்த இரண்டு நாட்களாக செயற்கை மழைக்கான சாதகமான நிலை காணப்படுகிறது. செயற்கை மழைக்கு காற்றின்வேகம் ஒரு மணி நேரத்திற்கு 20 நாட்டிக்கல் மைலுக்கும் குறைவாக இருக்க வேண்டும். மேலும், மேகக்கூட்டத்தின் ஈரப் பதம் 70 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும். இரண்டுமே தற்போது உள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை செயற்கை மழையா என்பதை உறுதியாக கூற முடியாது. வடகிழக்குப்பருவ மழை முடியும் வரை இந்த செயற்கை மழை முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார் தங்கவேலு.
சென்னை நகரில் செயற்கை மழைக்கான முயற்சிகள் நடப்பது இதுவே முதல் முறையாகும். இந்த ஆறு இடங்கள்தவிர கடந்த தென் மேற்கு பருவமழைக் காலத்தின்போது பூண்டி, திருவள்ளூர் இடையே 16 இடங்களில் இந்தமுயற்சி நடத்தப்பட்டது. ஆனால் அப்போது பலன் கிடைக்கவில்லை.
செயற்கை மழை: வெள்ளி அயோடைடு வேதிப் பொருளை, 1200 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் எரித்து, அதைஉயர் வேக கருவிகள் மூலம் மேகக் கூட்டத்தில் தூவுகிறார்கள். இதன் மூலம் மேகங்கள் குளிர்விக்கப்பட்டு,மேகங்கள் இணைந்து கூடுதல் மழை கிடைக்கிறது.
இந்த முறையை ஒரு நாளைக்கு, ஒரு குறிப்பிட்ட இடத்தில் செய்வதற்கு ரூ. 500 முதல் 600 வரை செலவாகும்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications