புதிய தலைமை செயலகத்துக்கு எதிராக முன்னாள் பொதுப் பணித்துறை பொறியாளர் வழக்கு
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படவுள்ளதை எதிர்த்து, தமிழகபொதுப் பணித்துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளர் குப்புராஜ் உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், கோட்டூர்புரத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது.இதற்கான பூமி பூஜை சமீபத்தில் நடந்தது. இந்த நிலையில் அரசின் இந்தத் திட்டத்தை எதிர்த்து பொதுப் பணித்துறைமுன்னாள் தலைமைப் பொறியாளர் குப்புராஜ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், தலைமைச் செயலகம் கட்டப்படவுள்ள இடம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளது.ஆசியாவிலேயே மிகப் பழமையான அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அருகில் இவ்வளவு பெரிய அலுவலகவளாகம் கட்டினால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும்.
இவ்வளவு செலவில், இவ்வளவு பெரிய கட்டடம் கட்டப்படுவதால் இப் பகுதியின் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும்.எனவே சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து முறையாக ஆய்வு நடத்திய பின்னரே, இதைக் கட்டுவது குறித்து அரசுமுடிவெடுக்க வேண்டும்.
முறையான ஆய்வு நடத்தாமல், மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றியும் கவலைப்படாமல் புதிய தலைமைச்செயலகம் கட்டப்படுவதை தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications