வைகோ கைது குறித்து இன்றும் பொடா மறு ஆய்வு குழு விசாரணை
டெல்லி & மதுரை:
பொடா மறு ஆய்வுக் குழு வைகோ மற்றும் நக்கீரன் கோபாலின் கைது விவகாரங்களைத் தீவிரமாக ஆய்வு செய்துவருகிறது.
பொடா ஆய்வுக் குழுவுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்ட பின் இப்போது தான் அந்தக் குழு கூடியுள்ளது.நீதிபதி அருண் சகார்யா, நீதிபதி இனாம்தார், நீதிபதி ரஹ்மான் ஆகியோரை உள்ளடக்கிய இந்தக் குழு வைகோசார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், தமிழக அரசு கடந்த வாரம் ஒரு வழியாய் அனுப்பி வைத்தஆவணங்களைப் பரிசீலித்தது.
இன்றும் அக் குழுவின் கூட்டம் தொடர்ந்து நடக்கிறது. முதலில் இந்தக் குழுவை துச்சமாக மதித்து பதில்அனுப்பாமல் இருந்த தமிழக அரசு, இக் குழுவுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்ட பின் அடித்துப் பிடித்துஒரு அறிக்கை அனுப்பியது.
அதில் வைகோ வழக்கு ஆவணங்களுடன் ஒரு கடிதத்தையும் அனுப்பியுள்ளது. அதில், வைகோவின் வழக்குவிசாரணை பொடா நீதிமன்றத்தில் கடைசி கட்டத்தில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
இதன்மூலம் இந் த விவகாரத்தில் நீங்க் (மறு ஆய்வுக் குழு) தலையிட முடியாது என்றரீதியில் உள்ளது அந்தக்கடிதம். அக் கடிதத்தையும் பொடா மறு ஆய்வுக் குழு ஆராய்ந்தது.
அதே நேரம் கோபால் கைது குறித்த ஆவணங்களை தமிழக அரசு இன்னும் அனுப்பவில்லை. ஆனால், அந்தஆவணங்களை வேறு வழிகளில் இந்தக் குழு கலெக்ட் செய்துவிட்டது.
இன்றும் இக் குழுவின் கூட்டம் நடக்கிறது. இதில் வைகோ விஷயத்தில் ஏதாவது முடிவெடுக்கப்படலாம் என்றுநம்பப்படுகிறது.
இந் நிலையில் பொடா ஆய்வுக் குழு வைகோவுக்கு நியாயம் வழங்கும் என மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன்கூறியுள்ளார். மதுரையில் நிருபர்களிடம் பேசிய அவர்,
புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதால் பொடா விதிமுறைகளை வைகோ மீறியதாகக் கொள்ள முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதையே தான் மறு ஆய்வுக் குழுவிடமும் மத்திய அரசுதெரிவித்தது.
இதனால் பொடா மறு ஆய்வுக் குழு வைகோவுக்கு நியாயத்தை வழங்கும் என்றார்.
வைகோ மீது வழக்கு நடக்கும்போது அவரை விடுவிக்க குழுவுக்கு அதிகாரம் உண்டா என்று நிருபர்கள்கேட்டபோது. அது குறித்து தெரியவில்லை. ஆனால், வைகோ விரைவில் விடுதலையாவார் என்பதில் எந்தச்சந்தேகமும் இல்லை.
வைகோ விவகாரத்தில் மத்திய அரசு மிக ஜாக்கிரதையாகவே தலையிட விரும்புகிறது. இந்த ஜாக்கிரதை உணர்வை,சிலர் வைகோவை மத்திய அரசு கை கழுவி விட்டதாகக் கருதுகின்றனர். அது தவறு என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications