கர்நாடகாவில் காவிரி நீரை மோட்டார் வைத்து உறிஞ்ச திட்டம்
பெங்களூர்:
காவிரி உள்ளிட்ட கர்நாடக நதிகளில் செல்லும் நீரை மோட்டார்கள் மூலம் உறிஞ்சி ஏரிகளை நிரப்பும் திட்டத்தைசோதனை முயற்சியாக ஹவேரி மாவட்டதில் அம் மாநில அரசு துவக்கியுள்ளது.
இது குறித்து கர்நாடக குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் கோலிவாட் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகாவில் கடந்த 3 வருடங்களாக வறட்சி நிலவி வருவதையடுத்து இந்தப் புதிய திட்டத்தை செயல்படுத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி காவிரி உள்ளிட்ட எல்லா பெரிய மற்றும் சிறிய நதிகளில் 15 மீட்டர் தூரத்தில் மோட்டார் வைத்து நீரைஉறிஞ்சி அருகில் உள்ள ஏரி மற்றும் குளங்களில் நிரப்பப்படும். சோதனை முயற்சியாக முதலில் துங்கபத்ரா நதியில்இத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நதியில் உறிஞ்சப்படும் நீர் ரானேபென்னூர் தாலுகா மேட்லேரி ஏரியில் நிரப்பப்படும். படிப்படியாக இத்திட்டம் காவேரி, கிருஷ்ணா உட்பட பல நதிகளில் அமுல்படுத்தப்படும். இவ்வாறு உறிஞ்சப்படும் நீர் குடிநீருக்குமட்டும் பயன்படுத்தப்படும். மிச்சமிருந்தால் பாசனத்துக்கும் வழங்கப்படும் என்றார்.
இதனால் காவிரி நீர் அணைக் கட்டுக்குச் செல்லும் முன்னரே உறிஞ்சப்பட்டு ஏரிகளில் நிரப்பப்பட்டுவிடும்.அணைக் கட்டுகளில் உள்ள நீரைக் கணக்கில் வைத்துத் தான் தமிழகத்துக்கு இவ்வளவு நீர் தர வேண்டும் எனகாவிரி கண்காணிப்புக் குழு அவ்வப்போது உத்தரவிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications