ராமுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு: தமிழக போலீசுக்கு மத்திய அரசு உத்தரவு
சென்னை:
இந்து தலைமை ஆசிரியர் என்.ராமுக்கு வழங்கப்பட்டு வரும் எக்ஸ் பிரிவு பாதுகாப்பை மேம்படுத்தி ஒய் பிரிவுபாதுகாப்பு வழங்குமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக ராமின் கோரிக்கையை ஏற்று இந்து அலுவலகத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையின்பாதுகாப்பு வழங்கும் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வாபஸ் பெற்றுக் கொண்டது.
இந் நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்றிரவு 8 மணியளவில் மத்திய உள்துறை இணைச் செயலாளர் ஹர்மிந்தர் சிங்கிடம் இருந்து தமிழக அரசுக்குஒரு கடிதம் வந்தது. அதில், இந்து அலுவலகத்துக்கு மத்தியப் படை பாதுகாப்பு வழங்கும் முடிவு வாபஸ்பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
முன்னதாக மாலை 4 மணிக்கு அதே அதிகாரியிடம் இருந்து வந்த கடிதத்தில் மத்தியப் படை பாதுகாப்புவழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் ராமுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்குமாறுகூறப்பட்டிருந்தது.
பத்திரிக்கைகள் இந்த விஷயத்தில் யூகங்களின் அடிப்படையில் செய்திகள் போட்டு வருவதால் தான் இந்தஅறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என தனது அறிக்கையில் பிரானேஷ் கூறியுள்ளார்.
இந் நிலையில் ராமின் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுவிட்டதாகவும், அவருக்கு இப்போது ஒய் பிரிவு பாதுகாப்புத்தரப்படுவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எல்.டி.டி.ஈயால் ஆபத்து இருப்பதாக அவருக்குஏற்கனவே எக்ஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications