பிப்ரவரிக்குள் தேர்தல்- நாயுடு கோரிக்கை: தேர்தல் கமிஷன் நிராகரிப்பு
ஹைதராபாத்:
சட்டமன்றத்தைக் கலைக்க பரிந்துரைத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மார்ச் மாதத்துக்கு முன்பே தேர்தலைநடத்துமாறு தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை விடுக்கப் போவதாக கூறியுள்ளார்.
ஆனால், ஆந்திராவில் இப்போதைக்குத் தேர்தல் நடத்த முடியாது என தலைமைத் தேர்தல் ஆணையர்ஜே.எம்.லிங்டோ கூறிவிட்டார். இதனால் நாயுடு- தேர்தல் கமிஷன் மோதல் உருவாகும் என்று தெரிகிறது.
சட்டசபையைக் கலைத்த நாயுடு நிருபர்களிடம் பேசுகையில், மார்ச் மாதத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் ஆண்டுஇறுதித் தேர்வுகள் எழுதும் மாணவர்கள் பாதிக்குப்படுவார்கள். இதனால் மார்ச்சுக்குள்ளேயே தேர்தலை நடத்தவேண்டும் என்றார்.
ஆனால், டெல்லியில் என்.டி.டிவிக்குப் பேட்டியளித்த லிங்டோ, ஆந்திராவில் இப்போது தான் வாக்காளர்சரிபார்க்கும் பணியும், புதிய வாக்காளர் சேர்ப்புப் பணியும் நடந்து கொண்டுள்ளது. இதனால் பிப்ரவரியில்தேர்தல் நடத்துவது சாத்தியமல்ல.
தேர்தலை எப்போது நடத்துவது என நாங்கள் தான் முடிவு செய்வோம். சட்டமன்றம் கலைக்கப்பட்டாலும் தேர்தல்நடத்த எங்களுக்கு 6 மாத கால அவகாசம் உண்டு என்றார்.
இது குறித்து நாயுடுவிடம் கேட்டபோது, தேர்தலை எப்போது நடத்துவது என தேர்தல் கமிஷன் தான் முடிவு செய்யவேண்டும். அதே நேரத்தில் நாங்கள் இப்போது ஒரு தாற்காலிக அரசாக பதவியில் இருக்கிறோம். கேர் டேக்கர்அரசு நீண்ட நாள் பதவியில் இருப்பது சரியல்ல என்றார்.
இதற்கிடையே ஒரு பொறுப்பு அரசு பதவியில் இருப்பதால், பட்ஜெட் தாக்கலாவதில் சிக்கல் வருமே எனலிங்டோவிடம் கேட்டபோது, அது அவர்களது கவலை என்று பதில் தந்தார்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications