தஞ்சை அருகே பா.ஜ.க. பிரமுகர் வெட்டிக் கொலை
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணியின் பிரமுகர் ஒருவர் தலையை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
பாபநாசத்தையடுத்த அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் சிவக்குமார் (32). இவர் இப் பகுதியின் பா.ஜ.க. செயற் குழு உறுப்பினராக இருந்தார். மேலும் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். இயக்கங்களின் பொறுப்பாளராகவும் இருந்தார்.
ஒரு மாதத்துக்கு முன் இந்து முன்னணி தலைவர் இராம.கோபாலனை பாபநாசத்துக்கு அழைத்து வந்து பயிற்சி முகாமை சிவக்குமார் நடத்தினார்.
இந் நிலையில் இன்று அதிகாலை சிவகுமாரின் உடல் சாலியமங்கலம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை ஒட்டி ஒரு முட்புதரில் கிடந்தது. அவரது தலை வெட்டப்பட்டிருந்தது. மேலும் உடல் முழுவதும் வெட்டுக் காயங்கள் இருந்தன.
இதையடுத்து அப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவல் வந்தவுடன் டி.எஸ்.பி. கோதண்டராமன் தலைமையிலான போலீஸ் படை அங்கு விரைந்தது. தஞ்சாவூர் எஸ்.பி. தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அம்மாபேட்டையில் இருந்து சிவக்குமாரை நேற்றிரவு ஒரு கும்பல் கடத்திச் சென்று கொலை செய்து சாலியமங்கலத்தில் வீசியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications