இலங்கை அமைதி முயற்சிகளில் இருந்து நார்வே திடீர் விலகல்
கொழும்பு:
அதிபர் சந்திரிகா குமாரதுங்காவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும் தங்களது அரசியல் கருத்து வேறுபாடுகளைநீக்கிக் கொள்ளும் வரை, அமைதிப் பேச்சு முயற்சிகளில் இருந்து விலகிக் கொள்வதாக நார்வே நாடுஅறிவித்துள்ளது.
மேலும் சந்திரிகாவுடனான அரசியல் மோதல் காரணமாக அமைதி முயற்சிகளில் இருந்து ரணிலும் விலகிக்கொண்டுவிட்டதாக நார்வே கூறியுள்ளது.
நார்வேயின் இந்த திடீர் அறிவிப்பு இலங்கை அமைதி முயற்சிகளுக்கு விழுந்த பெரும் அடியாகக் கருதப்படுகிறது.
நேற்று முன் தினம் ரணிலையும், நேற்று புலிகளின் தலைவர் பிரபாகரனையும் நேரில் சந்தித்துப் பேசிய நார்வேதுணை வெளியுறவு அமைச்சர் விடார் ஹெல்ஜெசன் இன்று இந்த முடிவை அறிவித்தார்.
கொழும்பில் நிருபர்களிடம் பேசிய அவர், நாங்கள் நார்வேவுக்கு திரும்பப் போகிறோம். இப்போது இலங்கையில்நிலவும் அரசியல் சூழலில் அமைதிப் பேச்சைத் தொடர்வது சாத்தியமே இல்லை. அமைதி முயற்சிகளுக்குகொழும்பில் யார் பொறுப்பு என்பது தெளிவாகாமல் இந்த விஷயத்தில் மேற்கொண்டு எதுவம் செய்ய எங்களால்இயலாது.
நாளையே கூட பேச்சுவார்த்தையைத் தொடங்க முடியும். ஆனால், அதிபர் சந்திரிகா எடுத்த நடவடிக்கைகளால்எல்லாவிதமான வாய்ப்புக்களும் முடங்கிவிட்டன.
பாதுகாப்பு, போலீஸ்துறை ஆகியவற்றை அதிபர் எடுத்துக் கொண்டதால், அமைதி முயற்சிகளில் எந்தவிதமானமுடிவுகளும் எடுக்க முடியாத நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உள்ளார். அவரால் எந்த உத்தரவாதமும்கூட கொடுக்க இயலாத நிலையில் உள்ளார் என்றார்.
கடந்த 2002ம் ஆண்டில் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவும், அதைத்தொடர்ந்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தவும் மிக முக்கிய பங்கு வகித்தது நார்வே என்பதுகுறிப்பிடத்தக்கது.
அமைதிப் பேச்சுக்கள் தொடர்பாக ரணிலோடு, நார்வேயையும் சேர்த்து சந்திரிகா குறை கூறி வருகிறார் என்பதும்குறிப்பிடத்தக்கது.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications