முதுமலை போகும் வழியில் கலாட்டா செய்த சேலம் யானை: திரும்ப அழைத்து வரப்பட்டது
சேலம்:
முதுமலை யானைகள் முகாமிற்குக் கொண்டு செல்லப்படவிருந்த சேலத்தைச் சேர்ந்த யானை செய்த கலாட்டாகாரணமாக நடுவழியில் நிறுத்தி, திருப்பிக் கொண்டு வரப்பட்டது.
கோயில் யானைகளுக்கு ஒரு மாத கால ஓய்வு அளிக்கும் பொருட்டு முதுமலையில் யானைகள் முகாம் நடத்ததமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. நாளை முதல் அடுத்த மாதம் 16ம் தேதி வரை நடக்கவிருக்கும் இந்தமுகாமிற்கு யானைகளை லாரிகளில் அனுப்ப தமிழகமெங்கும் உள்ள கோயில் நிர்வாகிகள் மிகுந்த சிரமப்பட்டுவருகின்றனர்.
யானைகள் லாரியில் ஏற மறுப்பதும், இதனால் தார் குச்சிகளை வைத்து குத்தி, துன்புறுத்தி அவற்றை லாரியில்ஏற்றுவதும், ஏறினாலும் லாரியில் அலைமோதித் தவிப்பதும், பயத்தில் கீழே குதித்து காயமடைவதும் தினசரிசெய்திகளாகி விட்டன.
இந் நிலையில் சேலம் சுகவனேஸ்வர் கோயிலைச் சேர்ந்த 23 வயதான ராஜேஸ்வரி என்ற பெண் யானையைமிகவும் கஷ்டப்பட்டு 8 மணிநேர போராட்டத்திற்குப் பின், லாரியில் ஏற்றினர்.
லாரியில் செல்லும்போது நடுவழியில் தடுப்புக் கட்டைகளைத் துதிக்கையால் உடைத்தும், அமைதியின்றிஅங்குமிங்கும் அசைந்தபடியும் யானை ஆர்ப்பாட்டம் செய்துள்ளது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியருடன்ஆலோசனை செய்தனர் கோவில் நிர்வாகிகள்.
நேற்று தான் கோவை யானை கீழே குதித்து காயமடைந்தது என்பதால் பயந்து போன கோயில் நிர்வாகிகள்யானையைத் திரும்பவும் சேலத்திற்கே கொண்டு வந்து விட்டனர்.
முதல்வர் ஜெயலலிதா தனது தோஷ நிவர்த்திக்காக கஜமுக பூஜை செய்யும் பொருட்டு யானைகளை இதுபோல்வதைக்கிறார் என்று எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. முதுமலைக்குக் கொண்டு செல்லப்படும்யானைகளின் எண்ணிக்கை 81(கூட்டுத்தொகை 9- ஜெயலலிதாவின் ராசி எண்) என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் பரமக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிச் செயலாளர்ஜி.கே.வாசன், யானைகளும் கூட ஜெயலலிதா ஆட்சியில் துன்புறுத்தப்படுகின்றன என்றார்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications